Saturday, January 11, 2014

ரணைதீவுக் கடலில் புலிகளினால் சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் ஏர் விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை அடையாளம் காண்பதற்காக!

Saturday, January 11, 2014
இலங்கை::இரணைதீவுக் கடலில் புலிகளினால் சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் ஏர் விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை அடையாளம் காண்பதற்காக யாழ். சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக சில பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
 
1998 செப்டெம்பரில், பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்டனோவ்- 24 விமானம்,  புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியதாக கருதப்பட்ட நிலையில், கடந்த வருடம் அவற்றின் பாகங்கள், பயணிகளின் உடைமைகள், பெண் ஒருவரின் அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டிருந்தன.
 
மீட்கப்பட்டவற்றில் சில உடைமைகள் இன்று யாழ்ப்பாணத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸா நாயக்க தலைமையிலான குழுவினரால் மக்கள் மத்தியில் அடையாளம் காண்பதற்காக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

No comments:

Post a Comment