Saturday, January 25, 2014
சென்னை::மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக-இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இருநாடுகளிலும் சிறைகளில் உள்ள மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்படுகின்றனர்.
சென்னை::மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக-இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இருநாடுகளிலும் சிறைகளில் உள்ள மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் இன்று இலங்கை கோர்ட் 40 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய
உத்தரவிட்டது. நேற்று 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்னும்
ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள். இதன்மூலம் இலங்கை அரசு விடுதலை செய்த
மீனவர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. காரைக்காலைச் சேர்ந்த 42
மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை புழல் சிறையில் இருந்து 18 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இலங்கையில் இருந்து விடுதலையான 180க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இன்று
காரைக்கால் வந்ததும், அவர்களை சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment