Tuesday, January 14, 2014

பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கட்சி அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கம்?

Tuesday, January 14, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கட்சி அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்டற உறுப்பினரும் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த வாரம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதாவது சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய  மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்களுமாக இதனைத் தோற்கடித்தனர்.
 
இந்நிலையில் கட்சியின் வரவு செலவுத் திட்டத்தை தோற்டகடித்தமையினால் சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இதே வேளையில் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்கின்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
இதற்கமைய வலி கிழக்கு பிரசே சபையின் வரவு செலவுத் திட்டத்தை ஆளும் கட்சியினரே தோற்கடித்திருந்த நிலையல் இதற்கு உறுதுணையாக இருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதாக நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு   சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment