இலங்கையின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றன .
மேலும் சர்வதேச தலைவர்கள் இதனை ஆராய்வதற்கு இலங்கைக்கு வருவதும்
செல்வதுமாகவே உள்ளனர் . இவர்களுடைய செயற்பாடானது ஆடு நனைகின்றது என்று
ஓநாய் அழுத கதைக்கு ஒப்பானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார் .
இதேவேளை , வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யுத்தத்திற்கு
பின்பு இங்கு வந்ததும் கிடையாது . இலங்கை தமிழர்களின் தற்போதைய உண்மை
நிலைமைகளை பற்றி ஆராய்ந்ததும் கிடையாது . ஆனால் , இலங்கைக்கு எதிராக போலி
குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர் . இதனை எதிர்கால சந்ததியினரான
தற்போதைய சிறுவர்கள் புரிந்து கொண்டு தேசத்தின் மீது பற்றுக்
கொண்டவர்களாக வாழ வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார் .
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற
பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு
தெரிவித்தார் .
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,
தற்போது இந்நாட்டில் சமாதான சூழல் நிலவுகிறது . தற்போது வட ,
கிழக்கிற்கு எவ்வித அச்சமுமின்றி செல்லலாம் . தற்போது சிறுவர்களுக்கு
சுதந்திரமாக பாடசாலைகளுக்கு சென்று கல்வி பயில முடியும் . ஆனால் , யுத்தம்
நிலவிய காலப்பகுதியில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லும் போது தனது
புத்தகப்பையை பரிசோதனை செய்த பின்பு செல்ல முடியும் . அதேபோன்று பஸ்
வண்டிகளில் பிரயாணம் மேற்கொள்ளும் போதும் அவ்வாறான நிலைமையே காணப்பட்டது .
ஆனால் , தற்போது மாணவர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பாடசாலைகளுக்கு
செல்ல முடியும் .
தற்போது கல்வி நிலைமை மிகவும் உயர்நிலையில் காணப்படுகிறது .
இவ்வருடம் வட மாகாணத்திலிருந்தே அதிகமானவர்கள் பல்கலைக்கழகத்திற்கு
நுழைந்துள்ளனர் . அதேபோன்று வட கிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகள்
மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன . ஆனால் , வெ ளிநாடுகளில் வாழும்
புலம்பெயர் தமிழர்கள் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் .
இருப்பினும் குறித்த நபர்கள் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு இலங்கைக்கு
வந்தது கிடையாது . அதேபோன்று தற்போதைய உண்மை நிலைமைகளை கண்டறிவதும்
கிடையாது . ஆனால் , இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை
சுமத்துகின்றனர் . இதனை எதிர்கால சந்ததியினராகிய தற்போதைய சிறுவர்கள்
நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
தற்போதைய சிறுவர்கள் தேசத்தின் மீது பற்றுள்ளவராக இருக்க வேண்டும் .
தனது பெற்றோர் , ஆசிரியர்கள் மீது அன்பு செலுத்துவது போன்று நாட்டின்
மீதும் அன்பு செலுத்த வேண்டும் . இப்பாடசாலைக்கு சேர் . பொன்னம்பலம்
இராமநாதனின் பெயரேயே சூட்டப்பட்டுள்ளது . சேர் . பொன் . இராமநாதன்
யாழ்ப்பாணத்தில் பிறந்து கொழும்பில் கல்வி பயின்று தனது உயர்கல்விக்காக
இந்தியாவிற்கும் சென்றார் . இருப்பினும் அவர் இந்தியாவின் மீது அன்பு
செலுத்தினாரா . ஒருபோதும் கிடையாது . அவர் இலங்கை திருநாட்டின் மீதே
அதிகம் பற்றுக் கொண்டவராக காணப்பட்டார் பௌத்தர்களில் போயா தினத்தை
விடுமுறை தினமாக மாற்றியவரும் அவரே ;
எனவே , சேர் . பொன்னம்பலம் இராமநாதன் , பொன்னம்பலம் அருணாசலம் போன்று தேசப்பற்றுமிக்கவர்களாக தற்போதைய சிறுவர்கள் வளர வேண்டும் .
இப்பாடசாலை 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேளை 26 மாணவர்களும் 2
ஆசிரியர்களுமே காணப்பட்டனர் . ஆனால் , தற்போது 2000 மாணவர்கள் கல்வி
பயிலும் இப்பாடசாலையில் 98 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர் . குறுகிய
காலத்தினுள் பாரிய வளர்ச்சியை எட்டியுள்ளனர் . அதே - போன்றே
வட மாகாண கல்வியும் குறுகிய காலத்தினுள் நல்ல நிலைமைக்கு வந்துள்ளது .
இதேவேளை , தற்போது இலங்கையின் மீது மனித உரிமை மீறல்
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன . சர்வதேச நாட்டு தலைவர்கள்
இதனை ஆராய்வதற்கு இலங்கைக்கு வருகை தருவதும் செல்வதுமாகவே உள்ளனர் .
குறித்த சர்வதேச நாட்டு தலைவர்களின் செயற்பாடானது ஆடு நனைகிறது என்று
கண்ணீர் சிந்தும் ஓநாயின் செயற்பாட்டிற்கு ஒப்பானது . இதனை தமிழ் மக்கள்
நன்கு புரிந்துகொள்ள வேண்டும் .
தனது சாதி , மதத்தின் மீது பற்று வைப்பதை போன்று தனது நாட்டின் மீது
அன்பு செலுத்த வேண்டும் . நாங்கள் பிறந்த இப்பூமியை சீரழிக்காமல் பாதுகாக்க
வேண்டியது தற்போதைய சிறுவர்களின் பொறுப்பாகும் .
அத்துடன் , இந்து மதமானது புராதன மதங்களுள் ஒன்று . எனவே , குறித்த
மதத்தினையும் , கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டும் . இவ்வுலகில் திருட
முடியாதது கல்வியாகும் . அதேபோன்று கல்வி என்பது இரண்டு கண்களை போன்றது .
அதனை பாதுகாக்க வேண்டுமென திருக்குறளிலுள்ள இரண்டு குறளை எடுத்து காட்டிய
ஜனாதிபதி , இந்நாட்டின் எதிர்கால தலைவர்கள் என்ற வகையில் சிறப்பான முறையில்
கல்வி கற்று தேசத்தின் மீது பற்றுள்ளவராக வாழ வேண்டும் என்றார் .
No comments:
Post a Comment