Friday, January 03, 2014
சென்னை::ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் நாளை மறுநாள் மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது.சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து இதுவரை 104 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவற்றில் பிஎஸ்எல்வி வகையை சேர்ந்த ராக்கெட்டுகள் பெருமளவு வெற்றி பெற்றுள்ளன. ஜிஎஸ்எல்வி வகையை சேர்ந்த ராக்கெட்டுகள் 7 ஏவப்பட்டதில் 4 ராக்கெட்டுகள் மட்டுமே வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன.
ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளில் கிரையோஜெனிக் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்களை இஸ்ரோ நிறுவனம், இதுவரை ரஷ்யாவிலிருந்து பெற்று ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில் இந்த ராக்கெட்டுகளின் இன்ஜின் திறன் மேம்படுத்தப்படும் என்று கடந்த ஜூலையில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில்
கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிக்கப்பட்டது. இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் ஆகஸ்ட் 19ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்பட இருந்தது. அதில், ஜி-சாட் 14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் செலுத்தப்பட இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2வது நிலை இன்ஜினில் இருந்து திரவ எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோள் ஜனவரி 5ல் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதன்படி, நாளை மறுநாள் மாலை 4.18 மணிக்கு ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் பணி நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த 2004ல் விண்ணில் செலுத்தப்பட்டு பூமியை சுற்றிவரும் எஜூசாட் என்ற செயற்கைக்கோளுக்கு மாற்றாக ஜிசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் தகவல் தொடர்புகளை அளிக்கும் வகையில் 6 கே.யு டிரான்ஸ்பாண்டர்கள், 6 இ.எக்ஸ்.டி, சி பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள், கே.ஏ பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment