Friday, January 3, 2014

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் 40.594 குடும்பங்களைச் சேர்ந்த 131.116 பேர் மள்குடியமர்வு!

Friday, January 03, 2014
இலங்கை::கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் 40.594 குடும்பங்களைச் சேர்ந்த 131.116 பேர் மீள்குடியேறியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் இணைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
 
இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் 2009 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து , கிளிநொச்சி மாவட்டத்தில் 90 சதவீதமானவர்கள் மீள்குடியேறியுள்ளனர் .
வெடிபொருள் அபாயம் காணப்படும் இடங்களிலும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களாகக் காணப்படும் இடங்களிலும் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை .
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 22.522 குடும்பங்களைச் சேர்ந்த 70.363 பேரும் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 7.623 குடும்பங்களைச் சேர்ந்த 24.490 பேரும் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் 6.912 குடும்பங்களைச் சேர்ந்த 24.355 பேரும் பச்சிலைப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 3,537 குடும்பங்களைச் சேர்ந்த 11.908 பேரும் மீள்குடியேறியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் இணைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
 
 

No comments:

Post a Comment