Thursday, January 09, 2014
இலங்கை::சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிலுள்ள பொதுச்சேவைஆணைக்குழுக்களின்
தலைவர்கள் கலந்துகொள்ளும் 3 ஆவது மகாநாடு ஜனவரி 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது .
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ள இம்மகாநாட்டில்
சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிலுள்ள பொதுச்சேவை மற்றும்
சிவில் சேவை ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள்
பங்குகொள்ளவுள்ளனர் .
இம்மகாநாட்டில் பொதுச் சேவை தொடர்பில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான
ஒத்துழைப்பு , திட்டப்பரிமாற்றம் குறித்து ஆராய்வதுடன் பிராந்திய
நாடுகளில் பொதுச்சேவையை விருத்தி செய்தல் தொடர்பாகவும்
கலந்துரையாடப்படவுள்ளன .
மேலும் , பொது நிர்வாகம் தொடர்பாக பிராந்திய நாடுகளுக்கிடையே
சிறந்ததொரு அத்திபாரம் இம்மகாநாட்டினூடாக ஏற்படுத்தப்படுமெனவும்
எதிர்பார்க்கப்பட்டுள்ளது . 8 நாடுகள் அங்கம் வகிக்கும் சார்க் அமைப்பின்
பொதுச்சேவை ஆணைக்குழுக்களின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இம்மகாநாடு
இலங்கையில் நடைபெறுவது இதுவே முதற் தடவையாகும் .
இதன் முதலாவது மகாநாடு 2010 ஆம் ஆண்டு இந்தியாவிலும் இரண்டாவது
மகாநாடு 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment