Sunday, 05, January, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை எதிர்வரும் 19ம் தேதி மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அங்கு சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் எனத் தெரியவந்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கத்துடனேயே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார். இதன்போது வடமாகாண முதலமைச்சரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஜனாதிபதியுடன் முதலமைச்சர் நடத்திய பேச்சுக்களின் தொடர்ச்சியாக மாகாண சபை எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும், மக்களின் உடனடித் தேவைகள் குறித்து ஜனாதிபதிக்கு முதலமைச்சர் விளக்குவார் எனத் தெரிகின்றது.

No comments:
Post a Comment