Saturday, January 11, 2014

கொழும்பில் இருந்து சென்னைக்கு ரூ.18 லட்சம் தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணி கைது!

Saturday, January 11, 2014
சென்னை::கொழும்பில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
 
அப்போது ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த பிரசாத் ராவ் (46) என்பவர் சுற்றுலா பயணியாக கொழும்பு சென்று திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர். பேன்ட்டின் உள்பகுதியில் 600 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்து தைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 
அதன் சர்வதேச மதிப்பு ரூ.18 லட்சம். இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்து பிரசாத்  ராவிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
 

No comments:

Post a Comment