Saturday, January 25, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு என இந்த ஆண்டு 1168மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் துறைநீலாவனை வரையில் இதன் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதியொதுக்கீடுகள் மூலம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் கோபாலரத்தினம்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,பிரத்தியேக செயலாளர் பேரின்பமலர் மனோகரராஜ்,அமைச்சின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தன்<மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன்ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் திவிநெகும திணைக்களத்தின் அபிவிருத்தி அதிகாரிகள்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் அபிவிருத்திக்கு என 720 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 45 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் தலா பத்து இலட்சம் ரூபா செலவில் அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்படவுள்ளன.
குடி நீர்,மின்சாரம்,வீதி புனரரமைப்பு,முன்பள்ளி கல்வி,பொழுதுபோக்கு வசதிகள்,கலாசார மேம்பாடு உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் உட்கட்டமைப்பின் தொடர்ச்சியாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தினை கொண்டுவரும் நடவடிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.அதனால் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்களே என்பதை அவர்கள் சிந்திக்கவேண்டும் எனவும் பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் வெள்ள அனர்த்தத்தினை தடுக்கும் வகையில் விசேட வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ஒதுக்கீடுசெய்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களது கதிரைகளை தக்க வைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பவாத அரசியலையே செய்துவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment