Saturday, January 4, 2014

தீவிரவாதிகள் போலீசார் மோதல் : ஈராக்கில் 100 பேர் பலி!

Saturday, January 4, 2014
ரமாதி::ஈராக்கில் அல் கய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பழங்குடி இனத்தவருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாயினர்.ஈராக் தலைநகர் பாக்தாத் நகருக்கு மேற்கே அன்பர் மாகாணத்தில் உள்ளது ரமாதி மற்றும் பலுஜா நகரம். இந்நகரங்களில் 2003ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் முகாமிட்டு அல் கய்தா தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஈராக்கில் ஷியா பிரிவினரின் ஆட்சிக்கு எதிராக சிறுபான்மை இனத்தவராக உள்ள சன்னி பிரிவினர் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்நகரங்களில் தீவிர ரோந்து பணியில் போலீசார், ராணுவம், நேட்டோ படையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று ரமாதி மற்றும் பலுஜா ஆகிய இடங்களில் அல் கய்தாவுடன் தொடர்புடைய பழங்குடி இனத்தவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 71 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
துப்பாக்கி சண்டையில் 32 அப்பாவி மக்களும் பலியாகி உள்ளனர். ரமாதி நகரில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ரமாதி நகருக்குள் புகுந்து வார இறுதி நாளில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 14 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment