Wednesday, December 18, 2013

இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பது தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த வேண்டிய அவசியமில்லை: இந்திய பாதுகாப்பு அமைச்சு!

Wednesday, December 18, 2013
புதுடில்லி::இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பது தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த வேண்டிய அவசியமில்லை என இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது,
 
இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பது தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும், இந்த வகையிலான விவாதங்களுக்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.  பயிற்சி அளிப்பது தொடர்பான விவகாரம் அண்டை நாடுகள் உடனான உறவுகளை அடிப்படையாகக் கொண்டது என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்டை நாடுகளுடனான உறவுகள் தொடர்பில் கொள்கை அடிப்படையிலான தீர்மானங்கள் எடுப்பது உசிதமானதாக அமையும் என தெரிவித்துள்ளது. நட்பு ரீதியான வெளிநாடுகளுடன் புரிந்துணர்வு அடிப்படையில் பாதுகாப்பு குறித்த உறவுகள் பேணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பயி
ற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய படைவீரர்களும் வேறு நாடுகளில் பயிற்சி பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

No comments:

Post a Comment