Sunday, December 08, 2013
சேலம்::ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது. 14 மேஜைகளில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஏற்காடு இடைத்தேர்தல் கடந்த 4–ந் தேதி நடந்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக பி.சரோஜா, தி.மு.க.வேட்பாளராக வெ.மாறன் மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் என 11 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 269 வாக்குச்சாவடிகள் வெப்–கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது.இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்களில், 2 லட்சத்து 14 ஆயிரத்து 434 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது 89.24 சதவீதம் ஆகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சேலம்–ஏற்காடு ரோட்டில் வாக்கு எண்ணும் மையமான சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் பாதுகாப்பு அறையில்(ஸ்ட்ராங்ரூம்) பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. அங்கு தற்போது துணை ராணுவப்படையை சேர்ந்த 186 வீரர்கள், தமிழக போலீசார் அடங்கிய குழுவினர் என மூன்றடுக்கு பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.வாக்கு எண்ணும் மையம் 24 மணிநேரமும் வெப்–கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலை வரை நடக்கிறது. அநேகமாக முற்பகல் 11.30 மணிக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகள் 14 மேஜைகளிலும், 21–வது சுற்று 10 மேஜைகளிலும் நடத்தப்படுகிறது. ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர், ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் என 3 பேர் பணியில் இருப்பர். இந்த 3 பேரும்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை மத்திய தேர்தல் பார்வையாளர்(பொது) ரவிபிரகாஷ் அரோரா முன்னிலையில் நடைபெறும். வாக்கு எண்ணிகையையொட்டி கல்லூரியை சுற்றிலும் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் இன்று சேலம்–ஏற்காடு ரோட்டில் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் வகையில் ஒரு மேஜைக்கு ஒரு ஏஜெண்டு வீதம் 11 வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் 14 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு தலைமை ஏஜெண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏஜெண்டுகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட வேட்பாளரின் அங்கீகார கடிதத்துடன் ஏற்காடு தேர்தல் நடத்தும் அலுவலர் டி.சபாபதியிடம் கொடுக்கப்பட்டன. விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான அடையாள அட்டை ஏஜெண்டுகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment