Wednesday, December 18, 2013
அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வில் பணியாற்றியவர், எட்வர்டு ஸ்னோடன். மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட அந்நாட்டின் ராணுவ ரகசியங்களை, இவர், பகிரங்கமாக வெளியிட்டார். இதனால், அமெரிக்க அரசின் கோபத்திற்கு ஆளானார். கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டதால், அமெரிக்காவை விட்டு வெளியேறி, ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில் 'ஸ்னோடன் நாடு திரும்பினால், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்' என, சிலர் கருத்து தெரிவித்தனர். எனினும், வெள்ளை மாளிகை வட்டாரங்கள் இந்த கோரிக்கையை மறுத்து விட்டன.
இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், ஜே காமி நேற்று கூறியதாவது: ரஷ்யாவில் தற்காலிகமாக தங்கியுள்ள ஸ்னோடன், உடனடியாக நாடு திரும்ப வேண்டும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஏற்று, அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை சந்திக்க வேண்டும். ஸ்னோடன் விவகாரத்தில், அதிபர் ஒபாமாவின் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஸ்னோடன் பொதுமன்னிப்பு குறித்து தக்க தருணத்தில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு, ஜே காமி கூறினார்.
வாஷிங்டன்::அமெரிக்க ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்டு ஸ்னோடன், நாடு
திரும்ப வேண்டும்; வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும்' என, அமெரிக்கா
வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வில் பணியாற்றியவர், எட்வர்டு ஸ்னோடன். மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட அந்நாட்டின் ராணுவ ரகசியங்களை, இவர், பகிரங்கமாக வெளியிட்டார். இதனால், அமெரிக்க அரசின் கோபத்திற்கு ஆளானார். கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டதால், அமெரிக்காவை விட்டு வெளியேறி, ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில் 'ஸ்னோடன் நாடு திரும்பினால், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்' என, சிலர் கருத்து தெரிவித்தனர். எனினும், வெள்ளை மாளிகை வட்டாரங்கள் இந்த கோரிக்கையை மறுத்து விட்டன.
இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், ஜே காமி நேற்று கூறியதாவது: ரஷ்யாவில் தற்காலிகமாக தங்கியுள்ள ஸ்னோடன், உடனடியாக நாடு திரும்ப வேண்டும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஏற்று, அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை சந்திக்க வேண்டும். ஸ்னோடன் விவகாரத்தில், அதிபர் ஒபாமாவின் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஸ்னோடன் பொதுமன்னிப்பு குறித்து தக்க தருணத்தில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு, ஜே காமி கூறினார்.

No comments:
Post a Comment