Friday, December 13, 2013

அடிமைகளாக கொண்டுவரப்பட்டு மலையகத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களைப் பார்க்காமல் பிரிட்டிஷ் பிரதமர் மனித உரிமை பற்றி பேசுவது வேடிக்கை: இராதாகிருஷ்ணன் எம்.பி!

Friday, December 13, 2013
இலங்கை::இந்தியாவிலிருந்து 200 வருடங்களுக்கு முன்னர் அடிமைகளாக கொண்டுவந்து மலையகத்தில் குடியமர்த்தப்பட்ட எமது மக்களுக்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்க்காமல் வடக்குக்கு மட்டும் சென்று மனித உரிமை மீறல்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
மலையகத்தில் எமது மக்களை கொண்டு வந்து போட்டதும் அவர்கள்தான். எமது மக்கள் எப்படி இருக்கிறார்கள். வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கவில்லை. எமது மக்களை அடிமைகளாக கொண்டு வந்ததும் மனித உரிமைகள் மீறல்கள்தான்.
பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் மலையகத்துக்கு வந்தார். தேயிலைத் தோட்டத்துக்கும் சென்றார்.
 
தேநீர் அருந்தினார். மக்களுடன் பேசினார். சென்றுவிட்டார்.
ஆனால் அந்த மக்களின் வாழ்க்கை முறை பற்றி எவரும் பார்க்கவில்லை என்றும் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment