Friday, December 13, 2013

இத்தாலியில் சிறுமியின் தொலைபேசியை திருடிய இலங்கையர் பொலிஸாரால் கைது!

Friday, December 13, 2013
சர்கோஷா::இத்தாலியில் வைத்து அந்நாட்டைச் சேர்ந்த  14 வயதான சிறுமியின் கையடக்கத் தொலைபேசியை இலங்கையர் ஒருவர்  திருடிய குற்றச்சாட்டில் இத்தாலி பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
 
பஸ்ஸில் பயணிக்கும் போது இச்சிறுமியின் தொலைபேசி காணாமல் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது சகோதரியின் தொலைபேசியூடாக அத்தொலை பேசியோடு தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும்  தொடர்பு கொள்ள முடியவில்லை.
 
அதனைத் தொடர்ந்து சகோதரியின் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியில் தன்னிடம் கைபேசி இருப்பதாகவும் அதனை பெற்றுக் கொள்ள 300 யூரோக்கள் (54,600 ரூபா) வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. மீண்டும் இவரைத் தொடர்பு கொண்ட போதிலும்  அவர் குறஞ்செய்தியல் 'பேச்சில்லை பணம்மாத்திரம்' தான் என்று அனுப்பியிருந்தார்.
 
அதனைத் தொடரந்து பொலிஸாரிடம் அறிவித்து விட்டு இருதரப்பினரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சர்கோஷா  வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியகம் ஒன்றுக்குச் சென்று குறித்த திருடரை தேடிய போதிலும் அவர் அங்கு இருக்கவில்லை. மீண்டும் ஒரு அழைப்பை ஏற்படுத்தி வேறு ஒரு இடத்துக்கு அழைத்தார் அங்கு சென்ற போது சாதரண உடையிலிருந்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.
 

No comments:

Post a Comment