Wednesday, December 18, 2013
இலங்கை::ஆயுர்வேத மசாஜ் கிளினிக் என்ற போர்வையில் நுவரெலிய வெடபரன் வீதியில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த நான்கு பெண்களையும் முகாமையாளரையும் கைது செய்தனர்.
நுவரெலிய பொலிஸார் இந்த ஐந்து பேரையும் கடந்த 15 ஆம் திகதி நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். கமகே முன்னிலையில் ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை தலா 7,500 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கும்படி உத்தரவிட்டார்.
கைதான பெண்கள் யக்கல, கடவத்த, நுவரெலிய, கந்தப்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

No comments:
Post a Comment