Thursday, December 19, 2013

முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்தின் அணுசரனையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கை: பாடசாலை மாணவர்கள் தென் பகுதியில்!

Thursday, December 19, 2013
இலங்கை::முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்தின் அணுசரனையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கை: பாடசாலை மாணவர்கள் தென் பகுதியில்.
 
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, வடக்கில் வாழும் பாடசாலை மாணவர்கள் தென் பகுதியில் வாழும் மக்களுடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்து, தென் பகுதியிலுள்ள முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் இந்த மாணவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.
 
முல்லைத்தீவு மகாவித்தியாலயம், முல்லைத்தீவு வித்தியானந்தா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களும், ஆசிரியர்களும்,  பெற்றோரும் இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.

பாணகொட இராணுவ குடியிருப்பு, கொழும்பு அருங்காட்சியகம், கோள் மண்டலம், துறைமுகம், காலிமுகத்திடல் உட்பட பல இடங்களுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
கடந்த 11 ஆம் 12 ஆம் திகதிகளில் இவர்களுக்கு இந்த சுற்றுலாப் பயணத்தை முல்லைத்தீவு இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment