Monday, December 16, 2013

அரசு நிறுவன தொகை முதல்வரிடம் அமைச்சர் வழங்கினார்!:-அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்பது உறுதி: அமைச்சர்!

Monday, December 16, 2013
சென்னை::அரசின் டிட்கோ நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களின் லாபத்தில் தமிழ்நாடு அரசின் பங்கு ஈவு தொகையான  30 கோடியே 43 லட்சத்து 5 ஆயிரத்து 750 ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தொழில் துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:_
 
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 2012_2013ஆம் ஆண்டில் நிகர லாபமாக 126 கோடியே 11 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது.இதில் 2012_2013ஆம்   ஆண்டிற்கான தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையான 12 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கான வரைவுக் காசோலை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் 2012_2013ஆம் ஆண்டில் 258 கோடியே 31 லட்சம் ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.  இதில் 2012_2013ஆம் ஆண்டிற்கான  தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையான 14 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாய்க்கான வரைவுக் காசோலை தேசிய அளவிலும், மாநில அளவிலும் தொழில்நுட்பம், கரும்பு அபிவிருத்தி, நிதி மற்றும் ஒட்டுமொத்த சர்க்கரை ஆலை செயல்பாட்டில் 32 விருதுகள் பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி_2 கூட்டுறவு சர்க்கரை ஆலை  2011_2012ஆம் ஆண்டில் 9 கோடியே 18 லட்சம் ரூபாயும், 2012_2013ஆம் ஆண்டில் 14 கோடியே 8 லட்சம் ரூபாயும் 
லாபம் ஈட்டியுள்ளது.  
 
இதில் 2011_2012 மற்றும் 2012_2013ஆம் ஆண்டுகளில் தமிழக அரசின் பங்கு <வுத் தொகையான 3 கோடியே 73 லட்சம் ரூபாய்க்கான காசோலை என மொத்தம் 30 கோடியே 43 லட்சத்து 5 ஆயிரத்து 750 ரூபாய்க்கான  காசோலைகளை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தலைமைச் செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்,  தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் சி.வி. சங்கர், சர்க்கரைத் துறை இயக்குநர் மகேசன் காசிராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்பது உறுதி: அமைச்சர்!
 
சேலம்::ஏற்காடு இடைத் தேர்தல் வெற்றி அடுத்த பிரதமர் ஜெயலலிதாதான் என்பதை உறுதி செய்துள்ளது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
 
ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் வாழப்பாடி பஸ்நிலையத்தில் நேற்று முன் தினம் நடைப்பெற்றது. அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.
 
ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலுக்கு வேட்பாளரை ஜெயலலிதா என்று அறிவித்தாரோ அன்றே வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது.தேர்தல் களத்தில் வாக்கு வித்தியாசத்தை உயர்த்தவே நாம் எல்லோரும் தேர்தல் பணியாற்றினோம். தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை முடிந்த போது திமுக வேட்பாளரை விட 78,116 வாக்குள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.
 
இதுவரை நடந்த தேர்தலிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தை காண்பித்தது இந்த தொகுதிதான். இது ஜெயலலிதாவிற்கு கிடைத்த முதல் வெற்றி. அடுத்து புதுச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று அடுத்த பிரதமர் ஜெயலலிதாதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஏற்காடு தொகுதி எம்எல்ஏ.வாக சரோஜா பொறுப்பேற்ற 3 நாட்களுக்குள்அந்த தொகுதி மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். ஏற்காடு தகுதியில் நாங்கள் 61 பேர் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோம். அதில் சிறப்பாக பணியாற்றி வெற்றி தேடி தந்த கூட்டணி கட்சியினர்,கழக தொண்டர்கள் இரவு,பகல் பாராது உழைத்த அனைவரையும் பாதம் தொட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment