Friday, December 13, 2013
இலங்கை::தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி நேற்று வியாழக்கிழமை (12.12.2013) பிற்பகல் கொழும்பிலுள்ள தென் ஆபிரிக்க தூதுவராலயத்திற்குச் சென்று சர்வமத தலைவர்கள் தமது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டனர். அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த மண்டேலாவின் அனுதாப குறிப்புப் புத்தகத்திலும் தமது அனுதாபக் குறிப்புக்களையும் எழுதி கையெழுத்திட்டுள்ளார்கள்.
இவ் வைபவத்தில் தென் ஆபிரிக்காவின் தூதுவரலாயத்தின் முதலாவது செயலாளர் (Ms. Phumzile Thekiso) பௌசில் தெக்சியோ கலந்து கொண்டு சர்வமதத் தலைவர்களது அனுதாபங்களை ஏற்றுக் கொண்டார்.
ஜனாதிபதியின் பௌத்த மத இணைப்பாளர் வன.கலகமதமரசி தேரோ, அருட் சகோதரர் ஜோன் குணரத்தின, ஜனாதிபதியின் இஸ்லாம் மத விவகார இணைப்பாளர் அல்ஹாஜ் கலாநிதி ஹசன் மொளலானா மொளலவி, ஹிந்துமத இணைப்பாளர் சிவஸ்ரீ பாபுசர்மா குருக்கள், கிறிஸ்தவ மத இணைப்பாளர் அருட்சகோதார் கெட்டியாரச்சியும் கலந்துகொண்டு சர்வமதங்கள் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.



No comments:
Post a Comment