இலங்கை::திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கொட்டியாரக்குடா கடல் கொந்தளிப்பினால் நீரில் மூழ்கிய கரையோரக் கிராமங்கள்.
கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் கடல் சீற்றத்தைத் தொடர்ந்து, மீன் பிடித் தொழில் பாதிப்படைந்துள்ள நிலையிலேயே மீனவர்களின் உடைமைகளும் கடல் கொந்தளிப்பினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.
திருகோணமலை மூதூர் பகுதியில் சீரற்ற வானிலையால் இடம்பெயர்ந்த மக்கள் இன்று முற்பகல் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
மூதூர் கடல்கரை பகுதியில் வாழும் சுமார் 30 குடும்பங்களை சேர்ந்த மக்கள், கடல் நீர் தமது குடியிருப்புக்களுக்குள் புகுந்ததால் நேற்று இடம்பெயர்ந்ததாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த மக்கள் மூதூர் உமர் பாறூக் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கடல்நீர் வடிந்தோடியதை அடுத்து மீண்டும் இன்று முற்பகல் தமது குடியிருப்புக்களுக்கு மக்கள் திரும்பினாலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.






No comments:
Post a Comment