Tuesday, December 10, 2013

இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காஸி பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றம் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை!

Tuesday 10 December 2013
இலங்கை::இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காஸி பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றம் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
இரு தரப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
 
இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் ஜப்பானிய தூதுவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை, யசூசி அக்காஸி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த அக்காஸி எதிர்வரும் புதன் கிழமை வரையில் நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலருடன் சந்திப்புக்களை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment