Saturday, December 7, 2013

அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் முதலிடம் பெற்ற தமிழ் மாணவருக்கு விருது வழங்கினார் ஜனாதிபதி!

Saturday, December 07, 2013
இலங்கை::அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய வித்தியாலய மாணவன் ஜே. சேஷயனைப் பாராட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கினார்.
 
சக மாணவர்கள் குழுவொன்றுடன் அவர் நேற்று (05) அலரி மாளிகைக்கு வந்தபோதே ஜனாதிபதியின் பாராட்டையும் விருதையும் பெற்றார். 
 
இந்த மாணவர் 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார்.
 
வித்தியாலய அதிபர் கமல ராஜா மற்றும் ஆசிரியர் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment