Tuesday, December 17, 2013

மீனவர்களை விடுவிக்க இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை!

Tuesday, December 17, 2013
இலங்கை::கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மனிதநேயஅடிப்படையில் தங்கள் நாட்டு மீனவர்களை விடுவிக்குமாறு இந்தியாவிடம், இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுபற்றி இலங்கை மீன்வளத் துறை தலைவர் நிமல் ஹெட்டியராச்சி நிருபர்களிடம் கூறியதாவது:
 
இலங்கை மீனவர்கள் 213 பேர் இந்தியகடற்படையினரால் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு உள்பட தென் மாநில சிறை களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இதில் பெரும்பாளானவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களை இந்தியா மனித நேய அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

No comments:

Post a Comment