Tuesday, December 17, 2013
இலங்கை::கல்முனை தமிழ் பிரிவுக்குரிய பிரதேச செயலகம் எதிர் வரும் ஜனவரி மாத்திற்குள் தனி அலகாகத்த ரமுயர்த்தப்படும் இது சட்டத்திற்குட்டதாகவே மேற்கொள்ளப் படுகின்றது இதனைத் தடுப்பதிலும் எதிர்ப்பதிலும் எந்தவித அர்த்தமும் இல்லை.
என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.
பலநெடுங்காலமாக கல்முன தமிழ் பிரிவு இப்பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக அண்மைக்காலமாக அரசியல் மட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்ற இந்நிலையில் இது தொடர்பாக கல்முனைபொது அமைப்புக்கள் ஒன்று கூடி ஏற்பாடு செய்த கூட்டமொன்று கல்முனை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.புஸ்பராசா கல்முனை விகாரிபதி ரண்முத்துக்கலதேரர் அம்பாறை வித்தியானந்த மாகா பிரிவேனாவின் விஹாராதிபதி சஞ்சிந்தரிய தேரர் உட்பட அனைத்து கல்முனை வடக்கினைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஏனை பொதமக்களும் இக் கூட்டத்தில்; கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.
பலநெடுங் காலமாக கல்முனை தமிழ் பிரிவுக்குரிய பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் சட்டபூர்வமாக மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் இது இவளவு காலமும் இழுபறிநிலையில் இருந்து வந்தள்ளது. இதனை புதிதாக உருவாக்க வில்லை இவற்றிற்கு எதிர்புப் தெரிவிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை உண்மையான சட்ட பூர்வமான விடயமான கல்முனை பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்துவதில் எவ்ளவு சிக்கல் நிலை உள்ளது என்பதனை நினைக்கும் போது எமக்கு வேதனையளிக்கின்றது.
ஒரு உண்மையை நான் கூறியேயாக வேண்டும் கிழக்கு மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கக் கூடாது எனக்கூறும் ஒரே ஒரு தமிழ் அரசியல் வாதி நான் மட்டும்தான். இதற்குக் காரணம் இன்று கிழக்கு மாகாணசபைக்கு இவ் அதிகாரங்கள் வழங்கப் பட்டிருந்தால் எமது நிலை எவ்வாறு இருக்கும் என சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் இதனை ஏன் கூறினேன் என்பது அனைவருக்கும் புரியுமென நான் நினைக்கின்றேன். தற்காலத்தில் எதிர்பு அரசியல் செய்வதனூடாக ஏனையவர்களின் முன்னேற்றத்திற்கே அது வழி வகுக்கின்றது என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்க் கட்சியில் இணையும் தமிழர்கள் எல்லாம் தங்களுடைய சுயலாபங்களை நோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். இதனை நான் மாற்றியமைக்க வேண்டுமென்றே செயற்படுகின்றேன். நானும் பலசோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்தவன். 60 வருடங்கள் தூரநேக்குடன் திறமையான அரசியலை மேற்கொண்டிருந்தால் இவ்வாறன நிலை எமது மக்களுக்கு வந்திருக்க முடியாது எமது மக்கள் இவ்வாறு வாழ்ந்திருக்கவும் மாட்டார்கள் தற்போதாவது இந்நிலையினை மாற்றியமைக்க அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இதேபோன்ற பலபிரச்சினைகளுக்கு எமது மக்கள் முகம் கொடுத்து வருவதனை நான் நன்கறிவேன் இங்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எமக்கு பின்னால் நீதி தேடித் தருவற்காக பெரும்பான்மை இனத்தின் சார்பாக பௌத்த மதகுருமார்கள் பாடுபடுகின்றமை உண்மையில் போற்றுதற்குரியது. இவர்களைநான் பராட்டுகின்றேன். இலங்கையில் எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகள் அனைத்திற்கும் சிங்கள மக்களுடன் இணைந்து பலமான சமூகமாக எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என தெரிவித்துக் கொள்ள விருபுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment