Thursday, December 19, 2013
இலங்கை::::இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் பதிலியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சு நடத்தக் கூடாது என்று, இலங்கையின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை அதிகாரியாகவும், குடிமக்கள் பாதுகாப்புப் படையின் தளபதியாகவும் இருந்த றியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் கொள்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.
2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 3வது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் புலிகளின் பினாமிக் கட்சிகளை தடை செய்திருக்க வேண்டும். அவ்வாறு தடை செய்யாது விட்டது தவறு என்று தற்போது தான் புரிகிறது. பிரிவினை வாதம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகிறது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஹிட்லரின் நாஸிக் கட்சி தடை செய்யப்பட்டது. கம்போடியாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் பொல் பொட்ஸ் கொம்யூனிட்ஸ் கட்சி தடை செய்யப்பட்டது..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச வேண்டும் என்று வாதிட்டனர்.
இது நியாயமற்றது. இலங்கை அரசினால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் பதிலியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் யாராவது கேட்பார்களேயானால், அது, ஹிட்லர் அழிக்கப்பட்ட பின்னர் நாசிக்களுடன் பேச வின்ஸ்டன் சேர்ச்சில் எதிர்பார்த்தது போலாகி விடும்.
வடக்கு கிழக்கில், இலங்கை இராணுவம் தமிழர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்துவதாக இரா.சம்பந்தன் கூறினார்.

நான் இதுவரை கேட்ட மிகவும் துரோகத்தனமான கருத்து இது. உண்மையில் தமிழர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தியது புலிகளா அல்லது இலங்கை இராணுவமா என்று இரா.சம்பந்தனிடம் கேட்கிறேன்.
புலிகளின் செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிக்கவில்லை. அமைதியாக இருந்தது.
சட்டம், ஒழுங்கை இலங்கை இராணுவமும் காவல்துறையும் தான் பேணுகிறது.
பெருமளவு தமிழர்கள் காவல்துறையில் இணைக்கப்படுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை கொள்கிறது.
இலங்கை இராணுவம் யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் நுழையக் கூடாது என்று இரா. சம்பந்தன் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டிவிடாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடங்கியிருக்க வேண்டும்.
பிரபாகரன் நினைவாக தீபம் ஏற்றும்படி, மாணவர்களை நிர்ப்பந்தித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். துரோகத்தனமான தமது நோக்கங்களை அடைவதற்கு, அப்பாவி மாணவர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எச்சரிக்கிறேன். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இலங்கையில் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் பரப்பி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்றார் றியர் அட்மிரல் சரத் வீரசேகர.

No comments:
Post a Comment