Monday, December 16, 2013

உள்ளராட்சி மன்ற வரவு செலவுத் தி;ட்ட தோல்வி ஆளும் கட்சியை பாதிக்காது: அமைச்சர் டலஸ் அழப்பெரும!

Monday, December 16, 2013
இலங்கை::உள்ளராட்சி மன்ற வரவு செலவுத் தி;ட்ட தோல்வி ஆளும் கட்சியை பாதிக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றங்கள் ஜனநாயக ரீதியானவை என்பதே வரவு செலவுத் திட்டத் தோல்விகளின் மூலம் நிரூபனமாகியுள்ளது என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போதுதான் ஜனநாயக முறைமை முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் எதேச்சாதிகார போக்கில் செயற்பட்ட சபைகளின் வரவு செலவுத் திட்டங்களே தோல்வியடைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 
 
335 பிரதேச சபைகள் காணப்படுவதாகவும் இவற்றில் 17 உள்ளுராட்சி மன்ற வரவு செலவுத் திட்டங்கள் மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment