Tuesday, December 03, 2013
இலங்கை::பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரித்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அழைப்பையேற்று இலங்கை வருவாரா னால் அதனை கடுமையாக எதிர்ப்பதாக ஜோன் அமரதுங்க, தெரிவித்தார்.
நாட்டை நேசிக்கும் எதிர்க்கட்சியான நாம் இதனை எதிர்ப்பதோடு ஒரு நாட்டுத் தலைவனுக்கு இங்கு வருமாறு அழைப்பு விடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜோன் அமரதுங்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-
வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொள்வதை பிரதான எதிர்க்கட்சியென்ற ரீதியில் கடுமையாக எதிர்க்கின்றோம். பொதுநலவாய மாநாட்டுக்கு கலந்துகொள்ளாத மன்மோகன்சிங் ஒரு முதலமைச்சர் ஒருவரின் அழைப்பின் பேரில் இங்கு வர முடியாது. ஒரு நாட்டின் தலைவர் இலங்கை வரவேண்டுமென்றால் எமது நாட்டு ஜனாதிபதியே அழைப்பு விடுக்க வேண்டும்.
அதைவிடுத்து முதலமைச்சர் ஒருவருக்கு இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுக்க முடியாது. இதனை பிரதான எதிர்க்கட்சியென்ற ரீதியிலும் நாட்டை நேசிக்கும் கட்சியென்ற ரீதியிலும் கடுமையாக எதிர்க்கின்றோம்.
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தியதால் எமக்கு கிடைத்த பலன் என்ன ?
பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் இங்கு வந்தார். இறுதியில் என்ன நடந்தது? அவர் இலங்கைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வெளியேறினார்.
உலகின் விசாலமான நாடுகளான இந்தியாவில் 32 அமைச்சர்களே உள்ளனர்.
சீனாவில் அமைச்சர்களின் தொகை 27 ஆகும். ஆனால், இங்கு சிறிய நாட்டில் அமைச்சர்கள் தொகை 65 க்கும் மேலாக உள்ளது.

No comments:
Post a Comment