Friday, December 13, 2013

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தடுத்(து வைத்து விசாரிப்பு!

Friday, December 13, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மண்டைதீவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து பா.கஜதீபன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மண்டைதீவு சந்திப்பகுதியில் கடற்படையினரால் சுமார் அரை மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். 

10 மணியளவில் ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மாகாணசபை உறுப்பினரின் வாகனத்தை மண்டைதீவுச் சந்திப்பகுதியில் தடுத்து நிறுத்திய கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதன்பின்பு சுமார் அரை மணிநேரம் கழித்தே அவர்கள் மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இதானல் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு நேரம் பிந்தியே செல்ல முடிந்துள்ளது.

எத்துணை தடைகள் வந்தாலும் தீவகப்பகுதி மக்களுக்கான தனது ஆதரவும், சேவையும் தொடரும் எனவும் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக கட்சியின் தலைமைப்பீடத்திடமும், வடமாகாணசபையின் அவைத்தலைவரிடமும் முறைப்பாடுகளைத் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
  

No comments:

Post a Comment