Thursday, December 12, 2013

வடக்கில் மீண்டும் இளைஞர்கள் சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்து கொண்டு கிளர்ந்தெழுந்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது: அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

Thursday, December 12, 2013
இலங்கை::வடக்கில் மீண்டும் இளைஞர்கள் சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்து கொண்டு கிளர்ந்தெழுந்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது: அமைச்சர் டலஸ் அழகப்பெரும.
 
இளைஞர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு புரிகின்ற மொழியில் அவர்களுடன் பேச வேண்டும் என இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நாம் இதற்கு முன்னர் வடக்கிலும் தெற்கிலும் மூன்று கிளர்ச்சிகளுக்கு முகம் கொடுத்திருக்கிறோம். இது எதனால் ஏற்பட்டது என்பதையும் நாம் அறிவோம்.
 
இந்நிலையில் வடக்கில் இளைஞர்கள் மீண்டும் சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்தாலோ தெற்கில் இளைஞர்கள், ‘வாழ்வதை விட சாவதே மேல்’ என சுவர்களில் எழுத ஆரம்பித்தாலோ என்னை பிரதானமாகக் கொண்டு நாம் அனைவரும் அதற்கு பொறுப்பாளிகளாக இருப்போம் என்றும் கூறினார்.
 
இளைஞர் அலுவல்கள் திறன் அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டுக்கான இந்த அமைச்சுக்காக 12 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்த அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இளைஞர்களின் திறன்களை அபிவிருத்தி செய்யும் விவகாரத்தில் அரசு மற்றும் தனியார் துறையினர் என கோடிட்டு எல்லைப்படுத்தி செயற்படுவது அரசின் நோக்கமல்ல. அனைத்து துறைகளையும் இணைத்துக்கொண்டு செயற்படவே அரசு எதிர்பார்க்கிறது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளும் ஐரோப்பியாவினதும், பிரிட்டனனிதும் நூற்றாண்டுகள் என கூறப்பட்டன. ஆனால் இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என அந்த நாடுகளே கூறியுள்ளன.
 
இந்த நூற்றாண்டு மனித வளத்தை மேம்படுத்தல் என்ற தொனிப் பொருளில் கல்வியில் மறுசீரமைப்பு செய்வதற்கு கடந்த காலத்தில் பலர் முயன்றார்கள். காலத்திற்கு பெற்ற வகையில் கல்வி நவீன மயப்படுத்தப்பட வேண்டும். எனினும் இதற்கு சரியான தீர்வு என்ன என்பதை கண்டறிந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான்.
 
இரண்டாம் நிலைக்கல்வி, மூன்றாம் நிலைக் கல்வி என வெவ்வேறாக இருந்தாலும் இதற்கான தொடபுகள் இல்லை. பரீட்சைக்கு தோற்றி சித்தியடையாதவர்கள் வேலையற்று விரக்தி நிலைக்கு சென்றனர். இதற்காகவே தொழில்நுட்ப கல்வி பாடசாலைகளின் கற்கை நெறிக்குள் கொண்டுவரப்பட்டது. மூன்று ஏ சித்தி பெற்றவர் கூட பல்கலைக்கழக அனுமதி பெற முடியாத நிலை இருந்தது.
 
வர்த்தக முகாமைத்துவ கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று 4200 மாணவர்கள் இதற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். அடுத்தாண்டு 5000 பேர் உள்வாங்கப்படவுள்ளனர். இளைஞர்களின் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக பீ டெக் பல்கலைக்கழக கல்லூரிகள் நெறிப்படுத்தப்படுகின்றன.
தேசிய இளைஞர் கொள்கை’ தயாரிக்கப்பட்டு இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களது திறன்களை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம். இறுதியாக தென்னாபிரிக்காவில் இன வெறிக்காக போராடிய முன்னாள் ஜனாதிபதி மறைந்த நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் அங்கு வைக்கப்பட்டுள்ள வேளையில் அவர் கூறிய ஒரு வசனத்தை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.
 
ஒருவரின் அறிவுக்கு பேசுவதை விட அவரது மனதுக்கு அவருக்கு புரியும் விதத்தில் அவரது மொழியில் பேச வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். ‘நீ ஒருவனோடு ஒரு மொழியில் பேசும் போது அவன் அதனை புரிந்து கொள்வான். ஆனால் அது அவனது மூளையை சென்றடையும். அதே மனிதனுடன் அவனுடைய மொழியில் பேசும் போது அது அவனது இதயத்தை சென்றடையும். அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

No comments:

Post a Comment