Wednesday, December 11, 2013
நாகை::தமிழக மீனவர்கள் 250 பேரை மீண்டும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர் . கோடியக்கரைக்கு தென்கிழக்கே
மீன்பிடித்தப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக
மீனவர்களின் 36 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான மீனவர்கள் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் ஆவர். கைதான
மீனவர்களை இலங்கை கடற்படையினர் திரிகோணமலை கொண்டு செல்வதாக தகவல்
வெளியாகியுள்ளது..
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, காரைக்கால், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நாகை கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, நம்பியார்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 36 படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தனர். 36 படகுகளிலும் இருந்த 250க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினர் திரிகோணமலை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் கிடைத்ததும் நாகை மீனவ கிராமங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment