Sunday, December 8, 2013

டெல்லியில் 11 தொகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்கள் தோல்வி!

Sunday, December 08, 2013
புதுடெல்லி::டெல்லியில் முதல் முறையாக 11 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக தோல்வியை சந்தித்தது.
 
டெல்லியில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்க கூடிய 11 சட்டசபை தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என்றும் அவர் அறிவித்தார்.
 
அதன்படி 1.ஜங்புரா தொகுதிஎம்.சிவா, 2.வசீர்பூர்எஸ்.ஈஸ்வரி, 3.ஜனக்புரிசொர்ணம் காளிநாதன், 4.புதுடெல்லி ஜி.எஸ்.மணி, 5.கல்காஜி ராமு, 6.ஆர்.கே.புரம் எஸ்.டி.பிரகாஷ், 7. ட்ரிநகர்எம்.எஸ்.சுப்பிரமணியன், 8.ரோகிணிசு.செங்கோட்டையன், 9.பாலம்ரத்தினம், 10.ராஜேந்திரா நகர்பி.டி. தானப்பன், 11.மாள்வியா நகர்எஸ்.சர்மிளா ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் 5 நாட்கள் பிரசாரம் செய்தார்.
 
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், தேமுதிக போட்டியிட 11 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. கணிசமான வாக்குகளை பெற்ற போதிலும், டெபாசிட்டை இழந்தது. சில இடங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்று விழுந்த வாக்கை விட தேமுதிக வேட்பாளர்கள் குறைந்த வாக்கை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment