இலங்கை::கேள்வி: ஐ.தே.க வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லக்கூடிய உயர்மட்டக் குழுவொன்றை அமைக்கும் நோக்குடன் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையே ஒரு முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. இது பற்றி தங்கள் கருத்தைக் கூறுவீர்களா?
பதில்: இதுவரை ரணில் விக்கிரமசிங்க அவர்களால் எத்தனையோ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான் அக்கட்சியில் இருந்த வேளையிலும் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அது போலவே தான் தற்போதும் புதிய குழு அமைக்கப்படுகிறது. ரணில் அவர்கள் குழுக்களை அமைத்து வருகிறார். இக்குழுக்களை அமைப்பதன் நோக்கம் கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து வேற்றுமைகள், பூசல்களை ஒத்திப்போடுவது தான். ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய தலைமைத்துவக்காலத்தில் அமைக்கப்பட்ட குழுக்களை எண்ணினால் அது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டியது என்பதை அறியலாம். கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளைத் தள்ளிப்போடக் குழுக்களை அமைப்பதில் இக்கட்சித் தலைவர் புகழ் பெற்றவர். இன்று ஐ.தே.க குழப்ப நிலையில் உள்ளது. ஐ.தே.கவுக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை மீண்டும் பெறக்கூடிய தகைமை மிக்க, திறமை மிக்க தலைவர்கள் இல்லை. ஐ.தே.கவை ஆதரித்த பலர் அரசின் பக்கம் திரும்பி விட்டார்கள்.
மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைமைத்துவம் ஐ.தே.கவுக்கு இல்லை என்பதால் இக்கட்சியின் செல்வாக்கை அதிகரித்து மீண்டும் பதவிக்கு வருவது மிகச் சிரமமான காரியம் ஆகும். கட்சியின் ஆதரவைப் பெறக்கூடிய, மக்களைக் கவரக் கூடிய அதி விசேட திறமை மிக்க தலைவர்கள் இக்கட்சியில் உருவாக வேண்டும். 1956 தேர்தலில் ஐ.தே.க செல்வாக்கிழந்து எட்டு ஆசனங்களை மட்டும் பெற்ற போது அக்காலத்தில் கட்சியில் இருந்த திறமைமிக்க தலைவர்களின் அரிய முயற்சிகளினால் 1960இல் ஐ.தே.க அதிகாரத்துக்கு வந்தது. அதுபோலவே 1970 தேர்தலில் மக்கள் செல்வாக்கை இழந்த ஐ.தே.க 8 ஆசனங்களை மட்டுமே பெற்று வீழ்ச்சி கண்டது. ஜே.ஆர், டட்லி, காமினி திசாநாயக்க போன்றவர்களே கட்சியில் எஞ்சி இருக்க, அக்கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் விரக்தியால் அரசின் பக்கம் மாறியமை வரலாறு. மக்கள் செல்வாக்கு குறைந்து செல்லும் கட்சியில் தொடர்ந்து இருக்க யாரும் விரும்புவதில்லை. ஒரு கட்சி தொடர்ந்து மக்களால் புறக்கணிக்கப்ப டும்போது அதில் உள்ள தலைவர்களும் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து விலகுவது இயல்பானதே. பல ஆண்டுகள் நாம் வாழ்ந்த போதும் மக்களுக்குப் பணி செய்யக்கூடிய காலம் மிகச் சொற்பமானதே. ஆகவே தான் மக்களால் ஒதுக்கப்பட்ட கட்சிகளை விட்டு விலகி அரசு பக்கம் சேர்ந்து மக்களுக்குப் பணி செய்வதை அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே ரணிலைப் போல் தொடர்ந்து தேர்தல் தோல்வியைத் தழுவிய அரசியல் தலைவரைக் காண முடியாது. தோல்வியின் தாக்கத்தை உணராது தொடர்ந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கட்சித்தலைவரையும் காண முடியாது. கட்சித் தலைவரின் அடி வருடிகளே மத்திய குழுவில் நியமனம் பெறுகின்றனர். இந்த அடிவருடிகளின் நோக்கம் மத்திய குழுவில் பதவி வகிப்பதே தவிர கட்சியை வளர்ப்பதும், அதனால் நாடு நன்மையடையப் பணி செய்வதும் இவர்களுடைய நோக்கமே அல்ல.
கேள்வி: ஐ.தேகவின் உள்ளக முரண்பாடுகளை நீக்க ஏதாவது வழி வகை உண்டா? ஐ.தே.கவின் சீர்திருத்தக் குழுவினரின் கோரிக்கைப்படி ரணில் அவர்கள் பதவி விலகுவதே பொருத்தமானது என நினைக்கின்ச்ர்களா?
பதில்: ஆம் அக்கட்சியில் நாம் இருந்தபோதும் அதுவே எமது சுலோகமாக இருந்தது. நான் அந்தக் காலத்திலும் ஐ.தே.கவில் இருந்தபோது ஐ.தே.கவின் தலைமைப்பதவி யாருக்கு கொடுபட வேண்டும் என ஒரு பத்திரிகையாளர் கேட்டார். ரணிலைத் தவிர வேறு யாருக்கும் கொடுபடலாம் என்றே பதில் அளித்தேன். தற்போது ஐ.தே.க செயலிழந்து விட்டது. தலைமைப் பதவியை மாற்றி வேறு தலைமைத்துவம் வந்தபோதும் கட்சியைப் புனரமைப்புச் செய்து மக்கள் செல்வாக்கைப் பெற்றுக் கொள்வது சாதாரண காரியமல்ல. மிகக் கடினமானது என்றே கூறலாம்.
ஐ.தே.கவின் தீவிர ஆதரவாளர்கள் விரக்தியடைந்து விட்டனர். அதனால் அவர்கள் புதிய கட்சியையும் புதிய தலைமைத்துவத்தையும் விரும்புகின்றனர். அதனாலே தான் வடமேல், மத்திய மாகாண சபைத்தேர்தலில் சரத் பொன்சேகாவின் கட்சி வெற்றி பெற முடிந்தது. ரணில் தலைமைத்துவத்தை விடாதபடியால்தான் ஐ.தே.க ஆதரவாளர்கள் பொன்சேகாவை ஆதரித்தனர். ரணில் தலைமைப் பதவியை விட்டு இறங்காவிட்டால் மேல் மாகாணத் தேர்தலில் பொன்சேகாவின் கட்சிக்குப் பெருமளவு ஆதரவு கிடைக்கும் என்று கூறலாம்.
கேள்வி: ஐ.தே.க வின் தலைமைத்துவ மாற்றம் அரசுக்குச் சவாலாக அமையலாம் என கருதுகின்ச்ர்களா?
பதில்: தற்போது அந்த நிலைமை இல்லை. ஏனென்றால் கட்சியைப் புனரமைத்துப் பழைய நிலைக்குக் கொண்டு வரக்கூடிய திறமை மிக்க தலைவர்கள் இன்று ஐ.தே.கவில் இல்லை. பொருத்தமான தலைமைத்துவம் இன்று ஐ.தே.கவில் இல்லை என்றே கூறுவேன்.
கேள்வி: வடமாகாண சபையின் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றிய பின்னர் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை எவ்வாறு நோக்குகிச்ர்கள்?
பதில்: ஆரம்பத்தில் இருந்து நாம் கூறிவந்தது இதைத்தான். அதிகாரத்தைக் கொடுத்தால் அவர்கள் பதவி ஆசையில் தமக்குள்ளே குழப்பத்தில் ஈடுபடுவார்கள். இது தான் அரசியல் என்பது. எந்தக் கட்சிக்கும் இது சகஜமான காரியம் தான். இப்போது குழப்பம் ஹினிதிக்குள் ஏற்பட்டுள்ளது. வடக்கிலே சிலர் பதவியில் இருப்பார்கள். பதவியற்றவர்கள் எதிர்ப்பில் ஈடுபடுவார்கள். குழப்பம் அதிகரித்தால் ஒரு சாரார் ஐ.தே.க வில் இணைவார்கள். மறுசாரார் அரசுடன் இணைவார்கள். தமிழ் நாட்டு அரசியலிலும் இதுதான் நடைபெறுகின்றது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பலபேர் சுலோகங்களுடன் கூச்சலிட்டார்கள். சில அரசியல் அதிகாரங்களைப் பெற்ற பின்னர் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பின்னர் மத்திய அரசின் இரு தேசியக் கட்சிகளுடன் இணைந்து கொள்கிறார்கள்.
அரசியலில் நடப்பதெல்லாம் இதுதான். நாங்கள் முன்னர் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மையாக ஆகிவிட்டன. வடமாகாண சபை முதலமைச்சரும் ஹினிதி இன் பெரும்பான்மையோரும் ஜனாதிபதி ராஜபகஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்கத் தீர்மானித்தார்கள். இத்தீர்மானம் ஹினிதி கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி விட்டது. ஹினிதி கட்சிக்குள் ழிஹிஹிரிக்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும் இருப்பதால் தான் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
வடமாகாண சபை முதலமைச்சர் பதவிக்குத் திரு. விக்னேஸ்வரனைத் தெரிவு செய்தமை ஒரு நல்ல தெரிவாகும். அவர் எங்களுடன் வேலை செய்த ஒரு நல்ல மனிதர். கடும் போக்கு எண்ணங்கள் அவரிடம் இல்லை. அவர் ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு தலைவர். ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
கேள்வி: வட மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தபோது அரசுடன் ஒத்துழைத்து நிர்வாகம் நடத்தப் போவதாகக் கருத்து தெரிவித்தார். அவ்வாறான நிலையில் வடபுல மக்களின் அபிலாஷைகளை அவர் எவ்வாறு பூர்த்தி செய்வார் என்பது பற்றிக் கூறுவீர்களா?
பதில்: அவர் மத்திய அரசுடன் இணைந்துதான் கருமமாற்ற வேண்டும். ஒற்றையாட்சி அமைப்பிலே மத்திய அரசே முக்கியத்துவம் பெறுகிறது. மாகாணங்களுக்குச் சில நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்த போதும் அனைத்துக்கும் பொறுப்பு மத்திய அரசே. ஜனாதிபதியே மத்திய அரசின் தலைவர். எனவே முதலமைச்சர்களும் மத்திய அரசாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவே (திஞ்லீணtண்) கருமமாற்றுபவர்கள். பிரதிநிதிகள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களைத் தமதாக்கிக் கொள்ள முடியாது. ஐ.தே.க சார்ந்த ஒரு முதலமைச்சர் மக்களுக்குச் சேவை செய்ய விரும்பினால் அவர், ஜனாதிபதி அவர்களுடன் இணக்கப்பாட்டுடன் ஒத்துழைப்புப் பெற்றுத் தான் மக்களுக்குப் பணி செய்ய முடியும். இதுதான் உண்மை நிலைமை. அதனால்தான் விக்னேஸ்வரன் அரசுடன் இணைந்து வடபுல மக்களின் அபிலாஷைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற அரசின் ஒத்துழைப்புடன் அரசியல் செய்யப்போவதாகக் கூறினார்.
வடபுலத்தின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு அரசின் ஒத்துழைப்புத் தேவை என்பதை உணர்ந்து தான் முதலமைச்சர் அவ்வாறு கூறினார். அரசுடன் இணங்கிப் போகாமல் பிணங்கினால் அபிவிருத்தியில் குறைபாடு ஏற்படலாம். அந்தக் குறைபாடு மக்களையே தாக்கும். அடுத்த தேர்தலில் மக்கள் கூட்டமைப்பிலும் முதலமைச்சரிலும் குறை காண நேரலாம். எனவே தீர்க்க தரிசனமாக வடமாகாண முதலமைச்சர் தமது கருத்தை வெளிப்படுத்தினார்.
கேள்வி: இலங்கையில் நடைபெறப் போகும் பொதுநலவாய மாநாட்டினால் நமது நாட்டுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவீர்களா?
பதில்: பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதால் நாட்டுக்குப் பல நன்மைகள் உள்ளன. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட நாடாக நமது நாடு விளங்க முடியும். பொதுநலவாய மாநாடு இங்கே நடைபெறும்போது பொதுநலவாயத்தில் சிறப்புப் பெற்ற நாடாக இலங்கை கருதப்பட வாய்ப்புண்டு. சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இந்த மாநாடு இங்கு நடைபெறுவது இலங்கையைப் பற்றித் தப்புக் கணக்குப் போடும் சில நாடுகளுக்கு ஒரு சவாலாக அமையும். மாநாட்டுக்கு வரும் சர்வதேசத் தலைவர்களும் பேராளர்களும் நமது நாட்டின் சமாதான சூழ்நிலை பொருளாதார முன்னேற்ற முயற்சிகள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டுள்ள பாரிய அபிவிருத்திப் பணிகளை நேரில் காணவும், உண்மை நிலைமையை உணரவும் வாய்ப்பளிக்கிறது இந்த மாநாடு. ஒரு தொகையான பத்திரிகையாளர் மாநாட்டுக்கு வருவர்.
அவர்கள் நம் நாட்டின் சமாதான, சமூக பொருளாதார முன்னேற்றம் பற்றிய நேரடி அறிவிப்பைப் பெறவும் வெளிநாடுகளுக்கு எடுத்துக் கூறவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கிறது. சில சர்வதேச பத்திரிகைகளும் தீய சக்திகளும் இலங்கையர் பற்றித் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும் பொய்யானவை என்பதை உலகத் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பளிக்கிறது. அரசின் தகவலுக்கமைய 1000க்கு மேற்பட்ட வணிகப் பெருமக்கள் பொது நலவாய மாநாட்டுடன் நடைபெறும் (கிதண்டிணலீண்ண் ஜீணிணூதசீ) வணிகர் மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர். இவர்களுள் 10 சதவீதமானவர்களாவது இலங்கையுடனான வணிக முயற்சிகளுக்கு முதலீடு செய்ய முன்வந்தால் அது நம் நாட்டுக்குப் பெரிய அதிர்ஷ்டமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
கேள்வி: பொதுநலவாயத்தின் வேண்டுகோ ளுக்கமைய இலங்கை செயல்படவில்லை என்று குறிப்பிட்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனடா கூறுவது பற்றி என்ன நினைக் கிச்ர்கள்?
பதில்: பொதுநலவாய அமைப்பு இலங்கையின் அரசியல் போக்கை அங்கீகரித்துள்ளது. இலங்கை பொதுநலவாய அமைப்பின் நியதிகளுக்கமையச் செயற்பட்டதால்தான் பொதுநலவாய அமைப்பு இலங்கையில் மாநாட்டை நடாத்தத் தீர்மானித்துள்ளது. கனடா பொதுநலவாயத்தில் ஓர் உறுப்பு நாடு. அது மட்டும் மாநாட்டைப் புறக்கணிப்பதால் மாநாடு நடைபெறாமல் விடப்போவதில்லை. யாரும் எதையும் பேசலாம். பேசச் சுதந்திரம் உண்டு. பொதுநலவாய அமைப்பு இலங்கையைத் தனது உறுப்பு நாடாக அங்கீகரித்துள்ளது என்ற உண்மையை எதிர்ப்பானவர்கள் விளங்கிக் கொண்டால் போதும்.
கேள்வி: இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவது ஒரு பிரச்சினையாகவுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண இந்திய அரசுடன் பேசிப் பிரச்சினைக்கு முடிவு காணத்
தீர்மானிக்கப்பட்டுள்ளதா?
பதில்: நாம் விரும்பினால் ஐரோப்பிய யூனியனுக்குப் பிரச்சினையை எடுத்துச் சொல்ல முடியும். ஆனால் இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி சுமுகமாக இப்பிரச்சினையைத் தீர்க்க உடன்பாடானது. இந்தியா நமது நல்ல நண்பன். இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு இந்தியா போன்ற வெளிநாட்டுடன் முரண்படக் கூடாது. தீய சக்திகள் சில இருநாடுகளுக்குமிடையில் சிண்டு முடிக்கின்றன. நாம் அதற்கு எடுபடமாட்டோம். சர்வதேச சட்டங்கள் சிறிய, பெரிய நாடுகள் அனைத்துக்கும் பொதுவானது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லை தாண்டுவதும் இலங்கை மீனவர்கள் இந்தியக்கடல் எல்லை தாண்டிச் செல்வதும் அனுமதிக்க முடியாதது. இந்திய மீனவர் இலங்கையின் எல்லைக்குள் பிரவேசித்தால் ஐ.நா.சாசனப்படி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பிரச்சினையைச் சுமுகமாகப் பேசித்தீர்க்கவே நாம் விரும்புகின்றோம்.

No comments:
Post a Comment