சென்னை::இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க
எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பா.ஜ., தலைமையை வலியுறுத்த, மூவர் குழு டில்லி
செல்கிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக பா.ஜ., மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், சென்னையில் உள்ள் அக்கட்சி
அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், திருச்சியில் நடந்த மோடி கூட்டத்துக்கு வந்த
மக்களுக்கு நன்றி தெரிவிக்க மேற்கொள்ளப்படும் பாதயாத்திரை குறித்து
விவாதிக்கப்பட்டதாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன், தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்
கூறியதாவது:
அந்நாட்டில்
நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது' என்பதில், தமிழக
பா.ஜ., தெளிவாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் நிலவுவது போன்ற குழப்பம், பா.ஜ.,வில்
இல்லை. தமிழக பா.ஜ.,வின் நிலை குறித்து, கட்சியின் பா.ஜ., தலைமைக்குத் தெரிவிக்க,
மூவர் குழு இன்று டில்லி செல்கிறது. இதில், நான், கட்சியின் தமிழக முன்னாள்
தலைவர்கள் கே.என்.லட்சுமணன், இல.கணேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளோம். "காமன்வெல்த்
மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது' என்ற, தமிழக மக்களின் உணர்வுகள், அதையொட்டி,
தமிழக பா.ஜ., எடுத்துள்ள முடிவு ஆகிவை குறித்து, கட்சி தலைமையிடம் இக்குழு
வலியுறுத்தும். இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மாநில செயற்குழு:
இதற்கிடையே, தமிழக பா.ஜ.,வின் செயற்குழு கூட்டம், இம்மாதம், 26,27 ஆகிய இரு
நாட்கள், பரமக்குடியில் நடக்கிறது. இதில், லோக்சபா தேர்தல் குறித்த முடிவுகள்
எடுக்கப்பட்டு, கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment