Wednesday, November 13, 2013

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கான பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் தற்போது நாட்டுக்கு வருகை!

Wednesday, November 13, 2013
இலங்கை::பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கான பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ப்ருனே, ஜெமெக்கா, ஷீசெல்ஸ், கென்யா, உகண்டா உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார  அமைச்சர்கள் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நியுஸிலாந்து, சைப்பிரஸ், மோல்டா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் வருகைதந்துள்ளனர்.
பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்களின் முதலாவது கூட்டம் கொழும்பில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் மாலை 6 மணி வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில்  இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என பொதுநலவாய ஊடக மையம் குறிப்பிடுகின்றது.

பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அவர்களின் விருந்தினர்களுக்காக இன்றிரவு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ்ஸினால் இரவு விருந்துபசாரமும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் பொதுநலவாய அமைச்சுக்களின் செயற்பாட்டுக் குழுக்கூட்டம் இன்று காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹம்பாந்தோட்டை மற்றும் காலியில் ஆரம்பமான பொதுநலவாய இளைஞர் மாநாடு மற்றும் மக்கள் மன்றம் ஆகியன நான்காவது நாளாகவும் இன்று கூடவுள்ளது.

கொழும்பில் நேற்று ஆரம்பமான வர்த்தக மாநாடு இன்றும் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment