Friday, November 8, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்பு: புலிகள் ஆதரவு தமிழர்களின் எதிர்ப்பை புறக்கணித்தார்!

Friday, November 08, 2013
லண்டன்::இலங்கை தலைநகர் கொழும்புவில் வருகிற 15 முதல் 17–ந்தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. அதில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்க கூடாது என அங்கு வாழும் புலிகள் ஆதரவு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புகளை சந்திக்க அழைப்பு விடுத்தார். அதில்புலிகளின் உலக தமிழர் பேரவை,  புலிகளின் தமிழர் பேரவை ஆகிய 2 அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டன.

அப்போது காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இலங்கை செல்ல வேண்டாம் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை பிரதமர் டேவிட் கேமரூன் நிராகரித்தார்.

மேலும், தான் இலங்கை செல்வதில் எவ்வித மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். பிரதமர் டேவிட் கேமரூன்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment