Wednesday, November 20, 2013

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்: சந்திரசிறி கஜதீர!

Wednesday, November 20, 2013
இலங்கை::தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்கு மாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் அழுத்தம் வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதனூடாகவே தீர்வு காண முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதினூடாகவே சரியான தீர்வை அடைய முடியும் எனவும் தெரிவித் தார்.ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 336 பேருக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் சந்திரசிறி முத்துகுமாரண, வவுனியா அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட இழப்புக்களுக்காக யாழ். வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 336 பேருக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன.இதன்படி 28 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்பட்டதோடு யுத்தத்தினால் சேதமடைந்த பெளத்த விகாரைகள், இந்து கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் என்பவற்றுக்கும் நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் புனர்வாழ்வு அதிகார சபையும் இணைந்து யுத்தத்தினால் வீடுகள், சொத்துக்கள், உயிர் இழப்புகள், அங்கவீனம் என்பவற்றுக்காக நஷ்டஈடு வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தி ருந்தது.இங்கு உரையாற்றிய அமைச்சர் சந்திரசிறி கஜதீர, 30 வருடங்கள் நீடித்த பயங்கரவாத சூழ்நிலைக்கு ஜனாதிபதி முடிவுகட்டியுள்ளார். தமிழ் மக்களுக்கு நிம்மதியாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிநாடுகளுக்குச் சென்று தவறாக அபிப்பிராயங்களை பரப்பி வருவதோடு தேர்தல் காலத்திலும் பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்கி வாக்கு பெற முயன்றது.

தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எமது கட்சி இனவாத அடிப்படையிலோ இன ரீதியிலோ செயற்படும் கட்சியல்ல. ஆரம்பம் முதல் நாம் தமிழ் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக் குழுவுக்கு வருவதினூடாகவே தமிழ் மக்களுக்கு உகந்த தீர்வை எட்ட முடியும் என்றார்..

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றும் போது கூறியதாவது:-
 
இன்று இந்த நிவாரணத்தை பெறுகின்றவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை காண விரும்புகின்றேன். கடந்த காலத்தில் இம்மண்ணில் நாங்கள் பெரும் துன்பங்களை சந்தித்துள்ளோம். அந்த காலத்தை மீண்டும் எம்மால் அனுபவிக்க முடியாது. 3 இலட்சம் தமிழ் மக்கள் மெனிக் பார்ம் நலன் புரி முகாமில் இருந்தனர். அவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தில் அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சராக தான் இருந்த போது மீள்குடியேற்றினேன்.
 
அதுமட்டுமல்லாமல் இக்கிராமங்களுக்கு தேவையான மின்சாரம், பாதை, பாடசாலை வசதிகள் உள்ளிட்ட என்னென்ன வசதிகள் தேவையோ அதனை பெற்றுக்கொடுத்துள்ளேன். இந்த நிலையில் இன்று இந்த மக்களுக்கு ஒரு தொகை கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. அவற்றை அவர்கள் தமது முதலீடாக கொண்டு வாழ்வாதார மேம்பாடுகளுக்கான தளத்தை இட வேண்டும் என வேண்டிக் கொள்வதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
 
அமைச்சர் சந்திர சிறி கஜதீர தமதுரையின் போது கூறியதாவது:–
 
இனப்பிரச்சினை தீர்வுக்குமான நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தரப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவினை
படுத்துவதற்கான அளுத்தத்தை கொடுக்க வேண்டியது தமிழ் மக்களது பொறுப்பாகும்.
 
வெறுமனே சர்வதேசத்துக்கு சென்று உணமைக்கு புறம்பான செய்திகளை கூறி இனப் பிரச்சினையை தோற்றுவிக்க முயல்கி்னறனர். கம்யுனிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில் ஒரு போதும் இன ரீதியான பிளவுகளை அங்கீகரித்ததில்லை.
 
கடந்த கால யுத்தம் ஏற்படுத்திய அழவுகளிலிருந்து நாங்கள் பாடங்களை கற்றுள்ளோம். மீண்டும் அந்த நிலைக்கு நாங்கள் செல்ல முடியாது. இன்று ஜனநாயகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுளளது. இதற்கு கடந்த மாகாண சபை தேர்தல் முன்னுதாரணமாகும். இந்த தேர்தலில் எமது அரசாங்க கட்சியின் வேட்பாளர்கள் மிகவும் நேர்மையாக செயற்பட்டதை தேர்தல் கண்கானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வடக்கில் ஜனநாயக சூழ் நிலையுள்ளது என்பதை அரசாங்கம் நிரூபித்துக் காட்டியுள்ளது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment