Wednesday, November 06, 2013
இலங்கை::புகலிடக் கோரிக்கையாளர் விவகாரம் குறித்து விசாரணை நடாத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை::புகலிடக் கோரிக்கையாளர் விவகாரம் குறித்து விசாரணை நடாத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் லீ ரியான்னன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகை தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அதிகளவில் அவுஸ்திரேலியா நோக்கிப் படையெடுப்பதற்கான காரணங்களை கண்டறிந்து அது தொடர்பில் அந்நாட்டு பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக தாம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், பெரும் எண்ணிக்கையிலான உள்ளுர் மக்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment