Monday, November 18, 2013

உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வே இலங்கைக்கு பொருந்தும்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தீர்வு பொருத்தமாக இருக்காது: கென்யாவின் வெளிவிவகார அமைச்சர் ஹமீனா மொஹமட்!

Monday, November 18, 2013
இலங்கை::உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வே இலங்கைக்கு பொருந்தும் எனவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தீர்வு பொருத்தமாக இருக்காது எனவும் கென்யாவின் வெளிவிவகார அமைச்சர் ஹமீனா மொஹமட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அண்மையில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகள் தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து பற்றி குறிப்பிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையை அச்சுறுத்துவதால் பலன் ஏதும் ஏற்படப் போவதில்லை. இலங்கை இதுவரை ஏற்படுத்தி கொண்டுள்ள அபிவிருத்தியை பாராட்ட வேண்டும்.

இந்த நாடு தற்பொழுது சரியான பாதையில் சென்றுக்கொண்டிருக்கின்றது என்றும் கென்யாவின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment