Tuesday, November 12, 2013

பாரம்பரியமான மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் பொதுநலவாய வர்த்தக மாநாடு ஆரம்பமானது!

Tuesday, November 12, 2013
இலங்கை::பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக மாநாடு கொழும்பில் தற்போது இடம்பெறுகின்றது.

பாரம்பரியமான மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் பொதுநலவாய வர்த்தக மாநாடு ஆரம்பமானது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் தலைவர் கலாநிதி மோகன் கௌல் மற்றும் பெரும் திரளான உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான வர்த்தக பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரை

சமாதானம் நிரம்பிய இந்த நாடு உங்கள் வருகையால் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொதுநலவாய அமைப்பானது உலகின் சில சிறிய மற்றும் பெரிய நாடுகளை கொண்ட உலகின் செல்வந்த மற்றும் வறிய பிரஜைகளை உள்ளடக்கியது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சராசரி தலா வருமானம் 250 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 50000 டொலர்கள் வரை காணப்படுவதாகவும், எனவே தான் எமது மாநாட்டின் தொனிப்பொருளானது ''சிறந்த உருவாக்கம் மற்றும் சமூக அபிவிருத்தியை பகிர்ந்து கொள்ளல்'' என்ற தலைப்பில் காணப்படுவதாகவும் அவர் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் தலைவர் - மோகன் கௌல் உரை

இலங்கை தனது வர்த்தக சமூகத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக இந்த மாநாடு அமைவதாக பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் தலைவர் கலாநிதி மோகன் கௌல் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் ஊடாக, ஆடைக் கைத்தொழில், துறைமுக சேவைகள், தோட்டத்துறை, சக்தி, தகவல் தொழில்நுட்பம் அல்லது தொழில்சார் சேவைகளில் சிறந்த வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு இலங்கையின் முதலீட்டில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்த மாநாட்டின் முடிவாக இலங்கையில் முதலீடு செய்வதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

கிடைக்கும் புதிய வாய்ப்புக்களின் அதிகபட்ச நன்மையை திறமையான, வளமுள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரை

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையில் பாரியளவில் பொருளாதார இடைவெளி காணப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் வர்த்தக அமர்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டு;ள்ளார்.

1971ம் ஆண்டு முதல் இந்த முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வறுமையை இல்லாதொழிப்பது குறித்து பேசப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான தீர்வுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடந்த கால பிரகடனங்களில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க இதுவரையில் வறுமை ஒழிப்பு தொடர்பில் காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி அடையாத நாடுகளின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment