Tuesday, November 26, 2013
ராமேசுவரம்::இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் தேசிங்குராஜா, சதீஷ், சண்முகம், ஆறுமுகம், செல்வராஜ் உள்பட 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஊர்க் காவல்படை நீதிமன்றம் 15 மீனவர்களையும் விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டது. ஆனால் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது.
விடுதலையான 15 மீனவர்களும் இலங்கை கடற்படை மூலம் சர்வதேச கடல் எல்லைக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். அங்கு இந்திய கடலோர காவல்படையிடம் மீனவர்களை இலங்கை கடற்படை ஒப்படைத்தது.
இதைத்தொடர்ந்து மீனவர்கள் இன்று மாலையோ அல்லது நாளை காலையோ மண்டபம் முகாமுக்கு கொண்டுவரப்படலாம் என தெரிகிறது.


No comments:
Post a Comment