Tuesday, November 12, 2013
இலங்கை::பொதுநலவாய வர்த்தக மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையில் இந்த வர்த்தக மாநாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, பொதுநலவாய அமைப்பின் சிறிய நாடுகளின் அமைச்சர்களுக்கான மாநாடும் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
பொதுநலவாய இளைஞர் பேரவையின் அமர்வு இன்று!
பொதுநலவாய இளைஞர் பேரவையின் அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் இளம் தலைவர்கள் மாநாடு இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, மாகம் ருஹூணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதுடன், இளைஞர் பேரவைக்கான தேர்தலும் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
9ஆவது பொதுநலவாய இளம் தலைவர்கள் மாநாட்டில் 44 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவிலான இளைஞர், யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொதுநலவாய இளைஞர்கள் மாநா
ட்டின் மூன்றாவது நாளான இன்று, பல்வேறு கூட்டத்தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய தினம் பொதுநலவாய இளைஞர் பேரவையை ஸ்தாபிப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்தகாலங்களில் இளைஞர், யுவதிகள் இந்த பேரவையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் நடைபெறும் தேர்தலின் ஊடாக பொதுநலவாய இளைஞர் பேரவையின் பிரதிநிதிகள் குழு தெரிவுசெய்யப்படவுள்ளது.
முதற் தடவையாக இவ்வாறானதொரு இளைஞர் பேரவை ஸ்தாபிக்கப்படுவதால், இலங்கைக்கு இது முக்கியதுவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய இளைஞர் பேரவையின் தலைமையகத்தை ஹம்பாந்தோட்டை நகரில் ஸ்தாபிக்குமாறு, பொதுநலவாய நாடுகளின் அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment