Friday, November 8, 2013

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயம் இரு தரப்பு உறவுகளின் திருப்பு முனையாக அமையும்: தயான் ஜயலதிக்க!

Friday, November 08, 2013
இலங்கை::இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயம் இரு தரப்பு உறவுகளின் திருப்பு முனையாக அமையும் என சிரேஸ்ட ராஜதந்திரியும் முன்னாள் பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவருமான கலாநிதி தயான் ஜயலதிக்க தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய பிரதமர் பங்கேற்காவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் நிச்சயமாக இடைவெளி ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் அமர்வுகளை புறக்கணித்தால் அது குறிப்பாக சிங்கள மக்களின் நம்பிக்கையில் பெரு விரிசலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமர்வுகளில் பங்கேற்காது தமிழர்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தியாவின் முனைப்புக்களில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உறவுகளில் விரிசல் ஏற்பட்டால் அது பிராந்திய வலயத்தையே பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment