Wednesday, November 13, 2013
இலங்கை::பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட வர்த்தக, இளைஞர் மற்றும் மக்கள் பேரவை ஆகிய மூன்று நிகழ்வுகளும் பெரும் வெற்றியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பொது நலவாய மாநாட்டை முன்னி
ட்டு நேற்று (நவ.12) பிற்பகல் பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப விசேட ஊடக நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அமைச்சர் மேலும் கூறுயதாவது
பொதுநலவாய நாடுகளின் வர்த்தகப் பேரவை வரலாற்றில் இலங்கை பெரும் சாதனை படைத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரும் எண்ணிக்கையில் அங்கத்துவ நாடுகள் இப்பேரவையில் கலந்து கொண்டன.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டைப் பகிஷ்கரித்துவிடார் என்ற குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை. இதனை சிலர் தவறாக புரிந்துள்ளனர்.
இந்த மாநாட்டில் தன்னால் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளது என்றே அவர் அறிவித்துள்ளார் என்றார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில்- இலங்கையில் மனித உரிமைகளை பலப்படுத்துவது தொடர்பில் பொதுநலவாயம் அதிக அக்கரை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மொரீசியஸ் வெளிவிவகார மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் அர்வின் பூலல், பாபிடோஸ் வெளிவிவகார அமைச்சர் மெக்ஸின் மெக்லின் பொது நலவாயத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரிச்சட் உக்கு ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment