
Wednesday, November 13, 2013
இலங்கை::இலங்கை வரலாற்றில் காலத்திற்குக் காலம் இனப்பிரச்சினைத் தீர்விற்காக செய்துகொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் தீவிரவாத சக்திகளின் நடவடிக்கைகளினால் கிழித்து வீசப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டனர். தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாணத்திற்கு நீதியான நியாயமான தேர்தலை நடாத்தினார். இந் நீதியான தேர்தல் மூலம் ஆட்சியமைத்துள்ள தேசிய கூட்டமைப்பானது பல வருடகால தமிழ் மக்களது கனவை நனவாக்கக்கூடிய இச் சந்தர்ப்பத்தையும் கைநழுவவிடும் செயற்பாடுகளையே முன்னெடுத்தவண்ணம் உள்ளனர்.
நிரந்தர சமாதானமும் சிறந்த நிருவாகக் கட்டமைப்பையும் ஏற்படுத்தப்பட்டுத்திக்கொள்ளக்கூடிய இத்தருனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணக்கத்தை ஏற்படுத்தி செயற்படுவதன் மூலம் தமது மக்களது அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும்.
அண்மையில் இடம் பெற்ற வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றியீட்டியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பானது மக்கள் தனக்கு அளித்த ஆணையை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக அரசாங்க அமைப்புகளின் உதவியுடன் வடமாகாணத்தின் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம், கடற்றொழில் துறைகளை மேம்படுத்துவதற்கு செயற்படுவது அவசியமாகும்
வடமாகாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது, தேசியப் பாதுகாப்புக்காக வடபகுதி உட்பட நாட்டின் நாலா பக்கங்களிலும் உள்ள கேந்திர நிலைகளில் இராணுவ முகாம்கள் வைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு கட்சியினர் கூறுவதற்கிணங்க இலங்கை போன்ற நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு நாட்டில் இருந்து இராணுவத்தினரை அகற்றிவிட முடியாது. தேசிய பாதுகாப்பு கருதி நாட்டின் நாலா பக்கங்களிலும் இராணுவத்தினர் அமர்தப்படுவது அவசியமானதாகும். அது மாத்திரமின்றி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடபகுதியில் மீன்டும் அவ்வாறான ஒரு பயங்கரவாத சூழல் உருவாகாது பாதுகாத்தல் இலங்கையர்களாகிய எமது கடமையாகும்.
வடபகுதி பெண்களை இராணுவத்தினர் பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள் என்றும் தமது சுமூக வாழ்வுக்கு பாதிப்பாக உள்ளதாகவும் சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெவ்வேறு ஸ்தாபனங்களான U.N.F.C.R மற்றும் ஓர்சார்ட் அமைப்புகள் வடபகுதியில் உள்ள பெண்கள் மத்தியில் ஆய்வுகளை நடத்தியது. இதன்போது, 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தங்களுக்கு இராணுவத்தினர் எந்தவிதமான தொல்லையையும் கொடுக்கவில்லை என்றும் தாங்கள் அமைதியாக நிம்மதியுடன் வாழ்கிறோம் என்றும் கூறியதாக இவ்விரு அமைப்புகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புதிய மாகாணசபை தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து பொலிஸாரே அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கின்றனர், இதுவரை காலமும் அமைதியாக இருந்த வடபகுதியில் மீண்டும் மக்களிடம் கொள்ளையிடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் அதிகமானோர் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று வடமாகாணத்தின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு முதலமைச்சரின் கைக்கு வந்துள்ளது. அவரது நேரடி அதிகாரத்தின் கீழ் பொலிஸ்படை இல்லாதிருந்தாலும் தமது பிரதேசத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு முதலமைச்சர் பொலிஸாரின் உதவியை பெறக்கூடியதாக உள்ளதுடன் அத்தகைய கோரிக்கைகளுக்கு பொலிஸார் மனமுவந்து ஒத்துழைப்பார்கள். அவற்றை கட்டுப்படுத்த வடமாகாண சபை நிர்வாகம் சிவில் பாதுகாப்பு குழுக்களை மக்களின் பிரதி நிதித்துவத்துடன் அமைத்து அந்தந்த பிரதேசத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஒத்துழைத்து குற்றச் செயல்களை குறைப்பதற்கு உதவ வேண்டும்.
இன்னும் சிலர், இராணுவம் வட இலங்கையில் தமிழர்களின் காணியை அபகரித்து இருக்கிறதென்றும் இதற்கு எதிராக தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்று தெரிவித்தவண்ணம் உள்ளனர். இவ்வாறானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று இவ்விதம் தப்பபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு பதில் அரசாங்கத்துடன் பேசினால் அவர்களுக்கு உண்மை நிலை புரிந்திருக்கும். மக்களின் காணியை இராணுவம் இலவசமாக பயன்படுத்தவில்லை என்பது இவ்வாரான நாட்டை பிளவுபடுத்தி அதில் குளிர்காயும் எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்காது. இராணுவம் அந்தக் காணிகளுக்கான வாடகையை அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆரம்பம் முதல் வழங்கி வருகின்றது. இன்னும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளையும் விரைவில் இராணுவம் அவற்றின் உரிமை யாளர்களுக்கு திருப்பி கொடுக்கவுள்ளது.
வடமாகாணத்தில் பல இடங்களில் இருந்த இராணுவ முகாம்கள் படிப்படியாக மூடப்பட்டுள்ளதுடன், பலாலி முகாமையும் காங்கேசன் துறை பிரதேசத்தையும் உள்ளடக்கிய பகுதியிலேயே பெருமளவு நிலத்தை இராணுவம் தேசியப் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறது. இவற்றில் பெரும்பகுதியான நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானவை. இப்போது அரசாங்கம் படிப்படியாக தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான நிலத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்கி வருகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தனியார் காணியை அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி கொடுக்க முடியாமல் இருந்தால் அரசாங்க நில மதிப்பீட்டாளர் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் பொதுமக்களுக்கு நியாயமான நஷ்டஈடு வழங்கப்படும்.
இலங்கைத் தமிழர்கள் மீது தமிழ் நாடு காட்டும் கரிசனை அவர்களுடைய போட்டி அரசியல் நலன் சார்ந்தது. தமிழ் நாடு, இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது போல் இக்கட்சிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றன வேயொழிய வேறு எந்த உண்மையான நோக்கமும் கிடையாது
இந்த நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் உரித்தான ஜனாதிபதியின் பணி அனைத்து மக்களுக்கும் உரித்தானது. ஆகையினால் எக்காரணம் கொண்டும் எவ்விதமான பாரபட்சத்தையும் காட்டது உதவி, அபிவிருத்தி என்பன அனைத்து பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரியே முன்னெடுக்கப்பட்டவண்ணம் உள்ளன. ஆனால், அந்தந்த உதவிகள் உரியவர்களுக்கும் உரிய பிரதேசத்திற்கும் கிடைக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்துடன் சுமூகமாக நடந்துகொள்ள வேண்டும். எனவே, வடக்கில் ஆட்சியமைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மக்கள் தனக்கு அளித்த ஆணையை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடந்துகொள்ளுமானால் அபிவிருத்தி, மேம்பாடுகள் வழமைபோல் சுமூகமாக நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேகமும்.
வே.தர்ஷன்:
No comments:
Post a Comment