Monday, November 4, 2013

காமன்வெல்த் மாநாடு: தமிழர்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் முடிவு எடுப்பார் - ஜெயந்தி நடராஜன் பேட்டி!

Monday, November 04, 2013
சென்னை::மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
 
கேள்வி:– பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் ரூ.650 கோடி செலவாகி உள்ளது. இது வீணாக செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்:– வெளிநாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்துவதற்குத்தான் பிரதமர் மன்மோகன்சிங் அயல்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தான் ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்த முடியும்.
 
இதனால் தொழில்கள் வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அன்னிய செலாவணியை உயர்த்த வெளி நாட்டு சுற்றுப்பயணம் அவசியமாகிறது. இது மக்களின் நலன் கருதி நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகிற பயணம். இதை வீணான செலவு என்று கூறுவது தவறு.
 
கேள்வி:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறாரா?
பதில்:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவு எடுப்பார். அவர் கலந்து கொள்ள கூடாது என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன். தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்.

No comments:

Post a Comment