Monday, November 11, 2013
இலங்கை::நுகேகொட, எம்புல்தெனிய பிரதேசத்தில் பிரித்தானிய பெண் ஒருவருடன் இலங்கையர் ஒருவர் வசித்து வந்த மாடி வீடொன்றிலிருந்து விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் மிரிஹான பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் நேற்று முந்தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றினூடாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதார பரிசோதகருடன் சென்ற பொலிஸாரின் தகவலின் பிரகாரமே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மீட்கப்பட்ட ஆயுதங்களில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் 16 இற்கு மேலதிகமாக வாள்கள் 242, பெரிய குத்துவாள் 42,ச்றிய குத்து வாள் 53, விளையாட்டு துப்பாக்கி 56, கத்திகள் 60, துப்பாக்கி ரவை ரின்கள் 19, தொலைநோக்குக் கண்ணாடிகள் 11 என்பனவும் குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய மிரிஹான விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரனைகலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வீட்டின் உரிமையாளர் என கருதப்படும் இலங்கையர் தலைமறைவாகியிருப்பதாக குறிப்பிடும் பொலிஸார் அந்த வீட்டில் வசித்து வந்ததாக கோறப்படும் பிரித்தானிய பெண்ணிடம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.]
இதேவேளை மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நாய்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 பெண் நாய்களும் 3 ஆண் நாய்களும் அடங்;குவதுடன் அவற்றின் கழிவுகளும் அவ்வீட்டின் இரண்டாம் மாடியில் இருந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

No comments:
Post a Comment