Wednesday, November 13, 2013

தினமும் ஒரு பெக் விஸ்கி குடிக்கிறார் 5 லட்சம் சிகரெட்டுகளை ஊதி தள்ளிய 100 வயது பாட்டி!!

Wednesday, November 13, 2013
லண்டன்::இங்கிலாந்தில் உள்ள கிழக்கு சஸ்செக்ஸ் நகரில் வசிப்பவர் டோரத்தி. இவருக்கு வயது 100. இவர் அரசு துறையில் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார். டோரத்திக்கு இளம் வயது முதலே சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது. குடி பழக்கமும் உண்டு.

டோரத்தி தினமும் சுமார் 15 சிகரெட்டுகளை ஊதி தள்ளியும், விஸ்கி குடித்தும் கூட தனது 100 வயது வரை ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார். சமீபத்தில் தனது 100வது பிறந்த நாளை நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார் டோரத்தி. அவர் கூறுகையில்,

நான் சிறுவயதில் சிகரெட் பிடிக்கும் போது 11 டாலர்தான். சிகரெட்டுக்காக மட்டும் ஒரு லட்சத்து 93 ஆயிரம் பவுண்டுக்கு அதிகமாக செலவழித்து இருக்கிறேன். தினமும் ஒரு பெக் விஸ்கி குடிக்கிறேன். தற்போதும் உடல் நலத்துடன் உள்ளேன். என்னால் எனது கைகளை நன்றாக உயர்த்தி செயல்பட முடிகிறது. இதுவரை 5 லட்சம் சிகரெட்டுகளை ஊதி தள்ளியிருப்பேன் என்கிறார்.

No comments:

Post a Comment