Sunday, November 10, 2013

நாடு தொடர்பாக போலியான விமர்சனங்களை செய்வது என்றால் சனல் 4 போன்ற சில பிரசாரம் தேடும் தொலைக்காட்சி சேவையினருக்கும் சில புலி ஆதரவு வெளிநாட்டுச் செய்திச் சேவையினருக்கும் ஒரு அலாதிப் பிரியம்!

Sunday, November 10, 2013
இலங்கை::எமது நாடு தொடர்பாக போலியான விமர்சனங்களை செய்வது என்றால் சனல் 4 போன்ற சில பிரசாரம் தேடும் தொலைக்காட்சி சேவையினருக்கும் சில புலி ஆதரவு வெளிநாட்டுச் செய்திச் சேவையினருக்கும் ஒரு அலாதிப் பிரியம். புலம்பெயர் புலி ஆதரவாளர்களால் வழங்கப்படும் சன்மானத்திற்காக ஒன்றுமே இல்லாத விடயங்களைப் பெரிதுபடுத்தியும், கற்பனையில் செய்திகளைப் புனைந் தும் காண்பிப்பதில் இவர்கள் காட்டும் ஆர்வம் அருவருக்கத்தக்கது. டொலர் களில் தாம் வாங்கும் வெகுமதிக்காக உலகெங்கும் போற்றப்படும் ஊடகத் துறையை இவர்கள் மலினப்படுத்துகிறார்கள்.

புலிகள் அமைப்பின் இராணுவப் பயிற்சியைப் பெற்றதுடன் அவர் களது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்த இசைப்பிரியா என்பவரை எமது இராணுவத்தினர் கைது செய்து அழைத்து வருவதைப் போன்றதொரு காட்சியை கடந்த வாரம் இந்த சனல் 4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது. இதனை உண்மையென நம்பி சிலர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆரவாரம் செய்தனர். ஆனால் இராணுவம் இதனை உடனடியாகவே மறுத்திருந்தது.

உண்மையில் இக்காட்சி சோடிக்கப்பட்டதொரு படத் தொகுப்பு. தற்கால நவீன தொழில்நுட்பங்களை வைத்து இதுவல்ல இதனைப் போன்ற இன்னும் பலவற்றைத் தயாரிக்கலாம் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். இந்த ஒளிப்படம் தெளிவற்றதொரு காட்சியாகவே உள்ளது. பார்ப்போரை உண் மையென நம்பவைக்கும் விதத்தில் தத்ரூபமாக இதனைத் தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளனர். அந்தளவிற்கு புலி ஆதரவாளர்களது பணம் விளையா டியுள்ளது.

இறுதி யுத்தம் நடைபெற்று நான்கு வருடங்களாகியுள்ள நிலையில் இதுபோன்ற காட்சிகள் இன்று வெளியிடப்படுவதன் உள்நோக்கத்தை மிக எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றும் மாநாடு நடைபெற உள்ள இவ்வேளையில் இந்த ஒளிநாடா வேண்டுமென்றே வெளியிடப்பட்டமையானது இது போலியான தயாரிப்புத்தான் என்ற பலரது சந்தேகத்தையும் உண்மையாக்கியுள்ளது.

இத்தகையதொரு ஒளிநாடா உண்மையிலேயே கிடைத்திருந்தால் அதனை முன்னரேயே வெளியிட்டிருக்கலாம், வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இது உண்மையிலேயே இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதைத் தடுக்க அல்லது அபகீர்த்தியை ஏற்படுத்தவெனத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதொரு நாடகமே என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஆனால் அனைத்துமே புஸ் வாணமாகிவிட்டது. இதனை உண்மையென நம்பி அதற்காகக் குரல் கொடுத்த ஏனைய ஊடகங் களையும், அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் நாம் என்னவென்று சொல்வது?

உண்மையில் தகவல் தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவர்கள் தெரிவித்தது போன்று இவ்விடயம் தொடர்பாக நாம் சிறிதளவில்கூட அலட்டிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இதனைப் பெரிதுபடுத்தினால் அவர்கள் அடுத்தடுத்து இதுபோன்ற தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபட முனைவர். இலங்கை இராணுவம் தெரிவித்தது போன்று அடுத்த மார்ச்சில் இவர்கள் இதுபோன்றதொரு வேறு ஓர் ஒளிநாடாவை நிச்சயம் வெளியிடுவர். ஏனெனில் மார்ச்சில் ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ளது.

சனல்4 இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பாக இதற்கு முன்னரும் வெளியிட்ட பல வீடியோ ஒளி நாடாக்கள் போலியானவை என்பதை சர்வதேச ஒளிப்பட நிபுணர்கள் குழு நிரூபித்துள்ளது. அப்படியிருந்தும் அவர்களது முயற்சி ஓயவில்லை. வாங்கும் பணத்திற்கு விசுவாசமாக ஒன்றிலாவது வெற்றி கண்டு புலி ஆதரவாளர்களிடம் பாராட்டைப் பெற அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகையதொரு முயற்சியே இதுவுமாகும். ஆனால் தொடர் தோல்விகளையே இவர்களால் சந்திக்க முடிகிறது. அரசாங்கத்திற்கு எதிராகவும், தமது தாய் நாட்டிற்கு சர்வதேசத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதிலும் குறியாகச் செயற்படும் உள்நாட்டு அரசியல்கட்சிகள் சிலவற்றின் அரசியல்வாதிகளுக்கும், புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களினால் தமது நாட்டில் அரசியல் நடத்தும் சில தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் சனல்4 வெளியிட்டுள்ள இதுபோன்ற போலி ஒளி நாடாக்கள் மகிழ்ச்சியைத் தந்திருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் நாட்டில் வாழும் மக்களுக்கும் இதில் துளியளவும் உண்மை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த விடயம். நமது நாட்டிற்கு வீண் பழியைச் சுமத்துவதற்காக மேற்கொள் ளப்படும் நாடகம் இதுவென்று நன்கு தெரியும். இதனை வெளியிடுபவர்கள் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுவதன் மூலமாக தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொள்வதுடன் ஊடகத்துறையையும் அவமதிக்கிறார்கள்.

இறுதி யுத்தத்தை மையமாக வைத்து சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டதொரு திரைப்படத்தைப் பார்த்தால் அது நிஜமாகவே யுத்தம் நடைபெற்றபோது நேரடியாக எடுத்தது போலத் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தளவிற்கு எமது நாட்டிலேயே தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒளிநாடாவைத் தயாரித்த பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் அதிகம் விளக்கத் தேவையில்லை.

யுத்தம் நிறைவடைந்து படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் படையினரிடம் சரணடைந்த சுமார் பன்னிரண்டாயிரம் புலி உறுப்பினர்களில் இசைப்பிரியா இருக்கவில்லை என்பதை இராணுவத் தரப்பு தெளிவாகக் கூறியுள்ளது. இசைப்பிரியாவை விடவும் புலிகளின் இராணுவப்பிரிவில் இருந்த பல முக்கியஸ்தர்களையே படையினர் கைது செய்து காப்பாற்றிப் புனர்வாழ்வளித்து இன்று விடுதலையும் செய்துள்ளனர். இவ்வாறு இசைப்பிரியா கைது செய்யப்பட்டிருப்பின் நிச்சயம் அவரும் விடுவிக்கப்பட்டிருப்பார்.

எனவே சனல்  4 அல்லது இதுபோன்ற ஏனைய ஊடகங்கள், ஊடக தர்மத் திற்கு இசைவாக உண்மைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வெறு மனே எவரோ தரும் பணத்திற்கும், சலுகைகளுக்குமாக இதுபோன்ற பொய்யான செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது. நாட்டிற்குச் சவாலாக இருந்த பயங்கரவாதத்தையே அரசாங்கம் யுத்தம் நடத்தி இல்லாதொழித்தது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் இருந்த காலத்தில் எத்தனையோ பொதுமக்கள், படைவீரர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலதரப்பட்டோர் அப்புலிகளால் கொல்லப்பட்டனர். புலிகளின் வதை முகாம்களில் பலர் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளனர். சிறு சிறு குற்றங்களைப் புரிந்த பலர் ஈவிரக்கமின்றிச் சுடப்பட்டு மின்சாரக் கம்பங்களில் கட்டிவிடப்பட்டனர். கல்வி கற்கக் கூடிய சிறார்கள் பலர் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு போர் முனைக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டனர்.

எனவே சனல்  4 உண்மையான ஊடகம் என்றால் புலிகளில் இந்த உண்மையான அராஜகங்களையே முதலில் வெளிக்கொணர வேண்டும். இவற்றிற்கு தமிழ் மக்களிடையே உண்மையான சாட்சியங்கள் உள்ளன. இதைவிடுத்து நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி அமைதியும், சமாதானமும் திரும்பியுள்ள நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனையக் கூடாது என்பதே எமது கருத்தாகும்.

No comments:

Post a Comment