Wednesday, November 06, 2013
ராமேஸ்வரம்::இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர். இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 86 பேர் இலங்கை யாழ்பாணம், வவுனியா மற்றும் திரிகோணமலை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுவிட்டனர்.
இலங்கை மீன்வளம், நீரியல் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 30 மீனவர்களும் இன்று ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களையும், இரண்டு நாட்களுக்கு முன் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 30 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் படகுகள் அனைத்தும் நங்கூரமிட்டு கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. படகுகள் கடலுக்குச் செல்லாததால் மீனவ கூலிகள் அனைவரும் வேறு வேலை தேடி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் லேத்பட்டறைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் கடற்கரையே வெறிச்சோடி காணப்படுகிறது. பரபரப்பாகச் செயல்படும் மீன்துறை அலுவலகமும் அமைதியாக உள்ளது.
கடந்த அக்டோபர் 3ம் தேதி இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 4 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரலிடம் இருந்து நேற்று ஊர்காவல்துறை கோர்ட்டுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து இலங்கை போலீசார் நான்கு மீனவர்களையும் இன்று காலை ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். கோர்ட் விசாரணைக்குப்பின் 4 மீனவர்களும் இன்று மாலைக்குள் விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெகதாப்பட்டினம்: இதே போல், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாபட்டினம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 250க்கும் மேற்பட்ட விசைபடகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர் சங்க துணை தலைவர் ராமதேவன் கூறுகையில், ‘இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 32 மீனவர்கள், 13 படகுகளை உடனடியாக விடுவிக்கவும், மீனவர்கள் கடலில் அச்சமின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்‘ என்றார்.

இலங்கை படையால் சிறைபிடிக்கப்பட்ட 4 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!
ராமேஸ்வரம்::இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற போது 4 பேரையும் இலங்கை படையினர் கைது செய்தனர். மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 30 பேருக்கு நவம்பர் 19ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மல்லாகம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, 30 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போ-து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 மீனவர்களும் இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடித்துச் செல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment